பாதுகாப்பு அமைச்சகம்

ஹால்டியாவுக்குச் செல்லும் போர்த்துகீசிய கொள்கலன் கப்பலில் எண்ணெய் கசிவு : இந்திய கடலோர காவல்படை எச்சரிக்கையாக உள்ளது

Posted On: 18 JUN 2021 9:34AM by PIB Chennai

சென்னையிலிருந்து தென்கிழக்கில் சுமார் 450 கி.மீ தூரத்தில் கடலில் எண்ணெய் கசிவு இருப்பதாக, கொழும்பு கடல் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திலிருந்து (எம்.ஆர்.சி.சி) 2021 ஜூன் 16  அன்று,  இந்திய கடலோர காவல்படைக்கு (ஐ.சி.ஜி)  தகவல் கிடைத்த்து.  மேலதிக விசாரணையில், கொழும்பிலிருந்து மேற்கு வங்காளத்தின் ஹால்டியாவுக்கு செல்லும் வழியில், எம்.வி.டெவன் என்ற போர்த்துகீசிய கொள்கலன் கப்பலின், எரிபொருள் தொட்டியில் (நீருக்கடியில்) விரிசல் உருவாக்கியுள்ளது தெரிய வந்துள்ளது. இதில், சுமார் 120 கிலோ லிட்டர், மிகக்குறைந்த சல்பர் எரிபொருள் எண்ணெய் இருந்தது. 

தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு முன்னர், சுமார் 10 கிலோ லிட்டர் எண்ணெய் கடலுக்குள் கசிந்ததால், தொட்டியில் மீதமுள்ள எண்ணெய்யை கப்பல் குழுவினர் மற்றொரு தொட்டிக்கு மாற்றினர்.  இந்தக் கப்பல் 382 கொள்கலன்களில் 10,795 டன் பொது சரக்குகளை ஏற்றிச் சென்றுள்ளது. கப்பலில் 17 பணியாளர்கள் உள்ளனர்.  இந்த கப்பல் ஹால்டியாவை நோக்கி சென்று கொண்டுள்ளது. இது 2021 ஜூன் 18 அன்று ஹால்டியாவை  அடையும்.

இந்திய கடலோர காவல்படை(ஐ.சி.ஜி), எம்.ஜி.டெவோனுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளதாகவும், கப்பல் நிலையாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள இந்திய கடலோர காவல்படையின் மாசுக் கட்டுப்பாட்டு குழு எச்சரிக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளது. கூடுதலாக, ஐ.சி.ஜி கப்பல்கள் மற்றும் கடலில் நிறுத்தப்பட்டுள்ள விமானங்களும் தயார் நிலையில் உள்ளன என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  ****************

 


(Release ID: 1728154) Visitor Counter : 371