பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

புதிதாக திறக்கப்பட்ட டிரைஃபெட் தலைமையகத்தை பிரதமரின் ஆலோசகர் திரு பாஸ்கர் குல்பே பார்வையிட்டார்

Posted On: 17 JUN 2021 6:36PM by PIB Chennai

புதுதில்லியில் புதிதாக திறக்கப்பட்ட டிரைஃபெட் தலைமையகத்தை மாண்புமிகு பிரதமரின் ஆலோசகர் திரு பாஸ்கர் குல்பே இன்று பார்வையிட்டார். என்எஸ்ஐசி வளாகம், ஒக்லா தொழில் பகுதி, பிரிவு-III, புதுதில்லியில் அமைந்துள்ள புதிய அலுவலக வளாகம் பழங்குடியினர் நல அமைச்சர் திரு அர்ஜுன் முண்டேவால் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டது.

டிரைஃபெட் நிர்வாக இயக்குநர் திரு பிரவிர் கிருஷ்ணா மற்றும் செயல் இயக்குநர் ஆகியோருடன் இணைந்து 30,000 சதுர அடி பரப்பளவிலான இந்த அலுவலகத்தை திரு குல்பே பார்வையிட்டார்.

காணொலி மற்றும் இதர நவீன உள்கட்டமைப்பு வசதிகள் அலுவலகத்தில் செய்யப்பட்டுள்ளன. உள்கட்டமைப்பு வசதிகளுக்காக டிரைஃபெட் குழுவை பாராட்டிய திரு குல்பே, அவர்களது பணிகள் சிறக்க வாழ்த்து தெரிவித்தார்.

25 புதிதாக வடிவமைக்கப்பட்ட பொருட்கள் மற்றும் வடிவமைப்பு பட்டறை பயிற்சி திட்டங்களை திரு குல்பே அறிமுகப்படுத்தினார். நீல மட்பாண்ட கைவினை பொருட்கள் மற்றும் கவர்ச்சிகரமான கம்பளிகள் உள்ளிட்ட இந்த பொருட்கள், ரிஷிகேஷில் போக்ஸா பழங்குடி கைவினை கலைஞர்கள் மற்றும் ஜெய்ப்பூரில் மீனா கைவினை கலைஞர்களுக்காக நடத்தப்பட்ட பயிற்சி பட்டறையில் உருவாக்கப்பட்டன.

பழங்குடியினருக்கு அதிகாரமளிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் டிரைஃபெட் தொடர்ந்து ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது,” என்று திரு குல்பே கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:  

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1727964

----



(Release ID: 1728016) Visitor Counter : 191