ரெயில்வே அமைச்சகம்
நாடு முழுவதும் 32,000 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்ஸிஜனை விநியோகித்தது இந்திய ரயில்வே: தமிழகத்துக்கு 5674 மெட்ரிக் டன் விநி்யோகம்
Posted On:
17 JUN 2021 6:18PM by PIB Chennai
இந்திய ரயில்வே இதுவரை பல மாநிலங்களுக்கு 32,017 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை, 1830க்கும் மேற்பட்ட டேங்கர்கள் மூலம் விநியோகித்துள்ளது.
இதுவரை 443 ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தங்கள் பயணத்தை முடித்துள்ளன. தென் மாநிலங்களுக்கு 17,600 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் விநியோகிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்துக்கு 5,600 மெட்ரிக் டன்னுக்கும் மேற்பட்ட ஆக்ஸிஜன்கள் ரயில்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளன.
இதுவரை மகாராஷ்டிராவுக்கு 614, உத்தரப் பிரதேசத்துக்கு 3797, மத்தியப் பிரதேசத்துக்கு 656, தில்லிக்கு 5722, ஹரியானாவுக்கு 2354, ராஜஸ்தானுக்கு 98, கர்நாடகாவுக்கு 4149, உத்தரகாண்ட்டுக்கு 320, தமிழகத்துக்கு 5674, ஆந்திரப் பிரதேசத்துக்கு 4036, பஞ்சாப்புக்கு 225, கேரளாவுக்கு 513, தெலங்கானாவுக்கு 3255, ஜார்கண்டுக்கு 38, அசாமுக்கு 560 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1727956
------
(Release ID: 1728013)
Visitor Counter : 170