சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

அரிதான நோய்கள் காரணமாக அவதியுறும் நோயாளிகளின் சிகிச்சைக்கான தன்னார்வ கூட்டு நிதி குறித்து பெருநிறுவனங்களுடன் டாக்டர் ஹர்ஷ் வர்தன் ஆலோசனை

Posted On: 17 JUN 2021 5:36PM by PIB Chennai

அரிதான நோய்கள் காரணமாக அவதியுறும் நோயாளிகளின் சிகிச்சைக்கான தன்னார்வ கூட்டு நிதி மற்றும் காச நோய் இல்லா பெருநிறுவன வளாகங்கள் குறித்து பெருநிறுவனங்களை பிரதிநிதித்துவப் படுத்தும் சங்கங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களுடனான காணொலி கூட்டத்திற்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் இன்று தலைமை வகித்தார்.

உலகெங்கும் 8 சதவீத மக்கள் அரிதான நோய்களால் அவதியுறுகின்றனர். 75 சதவீதம் பேர் குழந்தைகளாக இருப்பதால் அவர்களது சிகிச்சைக்காக பொருளாதார அளவிலும், மனதளவிலும் பெற்றோர்கள் பெருந்துன்பத்தை அனுபவிக்கின்றனர்,” என்று திரு ஹர்ஷ் வர்தன் கூறினார்.

அரிதான நோய்களுக்கான மருத்துவ முறைகளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு உகந்த சூழலை உருவாக்க அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து டாக்டர் ஹர்ஷ் வர்தன் விளக்கினார். “அரிதான நோய் குழுக்கள் உருவாக்கப்பட்டு, தொடர்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, அரிதான நோய் நிதி கணக்குகள் எட்டு திறன்மிகு மையங்களில் உருவாக்கப்பட்டுள்ளன. மரபணு ஆய்வுக்காக நிதான் கேந்திரங்கள் திறக்கப்பட்டுள்ளன. குறைந்த செலவிலான சிகிச்சை மற்றும் மருந்துகளின் மறுநோக்கத்திற்காக ஆராய்ச்சி குழுமம் உருவாக்கப்பட்டுள்ளது,” என்றும் அவர் கூறினார்.

அரிதான நோய்கள் காரணமாக அவதியுறும் நோயாளிகளின் சிகிச்சைக்காக தன்னார்வ கூட்டு நிதி முறையில் தனிநபர்கள் மற்றும் பெருநிறுவனங்கள் நன்கொடை வழங்குவதற்காக தேசிய டிஜிட்டல் கூட்டு நிதி தளத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் உருவாக்கியுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

போலியோவை ஒழித்ததை போல், 2025-க்குள் காச நோயை ஒழிப்பதற்கான தமது ஆவலை டாக்டர் ஹர்ஷ் வர்தன் வெளிப்படுத்தினார். “1984 முதல் போலியோ நாட்டில் ஒழிக்கப்பட்ட 2012 வரை போலியோவுடனான எனது அனுபவங்களின் மூலம் இத்தகைய மிகப்பெரிய செயல்களை செய்வதற்கு சமூகம் மற்றும் தொழில்துறை தலைவர்களின் துடிப்பான பங்களிப்பு மற்றும் அரசியல் உறுதி மிகவும் அவசியம் என்று புரிந்துக் கொண்டேன். பல சர்வதேச நிறுவனங்கள் போலியோவை ஒழிப்பதில் பங்காற்றின. அதே போன்ற நடவடிக்கைகளை காச நோயை 2025-க்குள் இந்தியாவில் இருந்து ஒழிக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் கனவை நனவாக்க எடுத்து வருகிறோம்,” என்று அவர் கூறினார்.

காச நோய் ஒழிப்புக்கான நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து ஒவ்வொரு மாதமும் 24-ம் தேதி தாம் நேரடியாக ஆய்வு செய்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1727936

                                                                                                                                   -----



(Release ID: 1727975) Visitor Counter : 186