சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

ஆயிரக்கணக்கான முதியோர்களுக்கு உதவி அளிக்கிறது முதியோர் உதவி மைய தொலைப்பேசி எண் 14567 (எல்டர்லைன்)

Posted On: 16 JUN 2021 6:05PM by PIB Chennai

எல்டர்லைன்என்ற இலவச உதவி மைய தொலைப்பேசி எண் 14567, ஆயிரக்கணக்கான முதியோர்களுக்கு உதவி அளித்து வருவதாக சமூகநீதி மற்றும் மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் திரு ரத்தன் லால் கட்டாரியா கூறியுள்ளார்.

உலக முதியோர் துஷ்பிரயோக விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் திரு ரத்தன் லால் கட்டாரியா கலந்துக் கொண்டார்.

முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் நடைமுறையை எளிதாக்க, வீடுகளுக்கு அருகே தடுப்பூசி மையங்களை அமைக்க மத்திய அரசு அனுமதித்துள்ளதாக அவர் கூறினார்.

முதியோர் உதவி மைய திட்டத்தின் (எல்டர்லைன்)கீழ் முக்கிய மாநிலங்களில் தொடங்கப்பட்ட  மாநிலம் வாரியான கால் சென்டர்கள் மூலம் முதியவர்கள் ஆயிரக்கணக்கானோர் பயனடைந்துள்ளதாக அமைச்சர் திரு ரத்தன் லால் கட்டாரியா தெரிவித்தார்.

தற்போதைய கொவிட் தொற்று சமயத்தில், இந்த உதவி மையம் மிகச் சிறப்பான பணிகளை செய்துவருவதாக அவர் தெரிவித்தார்.

கஸ்கன்ச் மாவட்டத்தில், வீடின்றி பசியில் வாடிய 70 வயது மூதாட்டி ஒருவர், இந்த உதவி மையம் மூலம் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார் என அமைச்சர் தெரிவித்தார்.

சந்தாசி பஸ் நிலையத்தில் ஒன்றரை மாதங்களாக முடங்கி கிடந்த 70 வயது முன்னாள்  வீரர், தனது வீட்டுக்கு செல்ல எல்டர்லைன் உதவியது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு முதியவர்களும், விரைவில் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என அமைச்சர் திரு ரத்தன் லால் கட்டாரியா வேண்டுகோள் விடுத்தார். வயதான உறவினர்கள், அருகில் உள்ள உதவி தேவைப்படும் முதியவர்களுக்கு உதவ ஒவ்வொருவரும் முன்வர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1727615

----(Release ID: 1727694) Visitor Counter : 203