வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்

8 வடகிழக்கு மாநிலங்களில் 10 பின்தங்கிய மாவட்டங்களை அடையாளம் காண மத்திய அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் உத்தரவு

Posted On: 16 JUN 2021 5:00PM by PIB Chennai

வடகிழக்கு பகுதியில் உள்ள 8 மாநிலங்களில், நிர்வாகம் மற்றும் வளர்ச்சியில்  பின்தங்கிய 10 மாவட்டங்கள் ஒரு வாரத்துக்குள் அடையாளம் காணப்படும் என மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறியுள்ளார்.

வடகிழக்கு பகுதி மேம்பாட்டு அமைச்சக அதிகாரிகள் மற்றும் வடகிழக்கு கவுன்சில் அதிகாரிகளின் உயர்நிலை கூட்டத்துக்கு இத்துறையின் மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் தலைமை தாங்கினார்அப்போது வடகிழக்கு மாநிலங்களில் 10 பின்தங்கிய மாவட்டங்களை அடையாளம் காண உத்தரவிட்டார். இந்த மாவட்டங்கள் ஒரு வாரத்துக்குள் அடையாளம் காணப்படும் என அவர் கூறினார். மற்ற வளர்ந்த மாவட்டங்களுக்கு இணையாக, இங்கும் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதுதான் இந்த நடவடிக்கையின் நோக்கம் என அவர் தெரிவித்தார்.

இந்த மாவட்டங்களில் எளிதாக வாழும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதிலும், பொருட்கள் மற்றும் சேவை விநியோகத்தை சுமூகமாக்குவதிலும்  கவனம் செலுத்தப்படும் என அவர் கூறினார்.

இந்த 10 பின்தங்கிய மாவட்டங்கள், ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட 14 இலக்கு மாவட்டங்களின் 49 முக்கிய அளவீடுகளை விட வேறுபட்டதாக இருக்கும் என டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறினார்.

விண்வெளி தொழில்நுட்பம் மூலம் வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சி திட்டங்களில், இஸ்ரோ உதவும் என டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறினார். இஸ்ரோவின் செயற்கைகோள் படங்கள் மற்றும் இதர தொழில்நுட்ப பயன்பாடுகள் மூலம் வடகிழக்கு மாநிலங்களின் உள்கட்டமைப்பு திட்டங்களை நிறைவு செய்ய இஸ்ரோ தனது பங்களிப்பை அளிக்கும் என அவர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1727578

----



(Release ID: 1727686) Visitor Counter : 155