தேர்தல் ஆணையம்

தலைமை தேர்தல் அலுவலர்களின் காணொலி மாநாட்டை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தியது

Posted On: 15 JUN 2021 6:56PM by PIB Chennai

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளின் காணொலி மாநாட்டை இந்திய தேர்தல் ஆணையம் இன்று நடத்தியது. சுமூகமான, செயல்திறன் மிக்க, வாக்காளர்களுக்கு நட்பான சேவைகள், வாக்காளர் பட்டியலின் சரிபார்ப்பு, தகவல் தொழிநுட்ப செயலிகளின் ஒருங்கிணைப்பு, விரிவான வாக்காளர் தொடர்பு திட்டம், ஊடகம் & தகவல் தொடர்பு யுக்தி, செலவு கண்காணிப்பு, சட்ட விஷயங்கள், வாக்கு இயந்திரம் மற்றூம் விவிபாட் சேமிப்பு தொடர்பான உள்கட்டமைப்பு மற்றும் பயிற்சி & திறன் வளர்த்தலின் மீது இக்கூட்டத்தின் போது கவனம் செலுத்தப்பட்டது.

தலைமை தேர்தல் அதிகாரிகளிடையே உரையாற்றிய தலைமை தேர்தல் ஆணையர் திரு சுஷில் சந்திரா, வாக்காளர் தொடர்பான சேவைகளை துரிதமாகவும், சிறப்பான முறையிலும் முன்னுரிமை அடிப்படையில் வழங்குவதற்கான பின்னணி அமைப்புகளுக்கு புத்தாக்கம் அளிப்பதற்கு இத்தகைய ஆய்வு கூட்டங்கள் அவ்வப்பொது நடத்தப்படுவது அவசியம் என்றார். தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கான ஆய்வு கூட்டங்கள் முறைப்படுத்தப்பட்டு அடிக்கடி நடத்தப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

வாக்களிக்க வராத வாக்காளர்களுக்கான கைபேசி செயலிகள், குற்ற செயல்கள் தடுப்பு மற்றும் தேர்தல் மற்றும் காவல் அலுவலர்களின் நியமனம் உள்ளிட்டவற்றில் தாங்கள் பின்பற்றிய சிறந்த நடைமுறைகளை விரிவிபடுத்தல்/ஒருங்கிணைத்தலுக்கான வழிகள் குறித்து சமீபத்தில் தேர்தல் நடைபெற்ற மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை தெரிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையர் திரு ராஜிவ் குமார் கேட்டுக்கொண்டார்.

தலைமை தேர்தல் அதிகாரிகளின் ஆக்கப்பூர்வ ஆலோசனைகளுக்காக அவர்களை பாராட்டிய தேர்தல் ஆணையர் திரு அனூப் சந்திர பாண்டே, மனிதவளம், உள்கட்டமைப்பு ஆகியவற்றில் உள்ள குறைகளை நிரப்புவதற்கும், தகவல் தொடர்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை திட்டமிடுவதற்கும், மாநிலங்களின் தேவைகளுக்கு ஏற்ப பயிற்சி மற்றும் திறன் வளர்த்தலை மேம்படுத்துவதற்கும் தேர்தல் நடைபெறாத காலகட்டத்தை தலைமை தேர்தல் அதிகாரிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1727296

-----


(Release ID: 1727347) Visitor Counter : 250