நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
2025-க்குள் எத்தனால் சுத்திகரிப்பு திறன் இரட்டிப்பாகி, 20% கலப்பு இலக்கு எட்டப்படும்: உணவு, பொது விநியோக துறை செயலாளர்
Posted On:
15 JUN 2021 3:18PM by PIB Chennai
பெட்ரோலுடன் எத்தனால் கலக்கும் திட்டம் குறித்து ஊடகவியலாளர்களிடம் உணவு, பொது விநியோக துறை செயலாளர் திரு சுதான்ஷு பாண்டே இன்று விளக்கினார்.
இந்தியாவில் எத்தனால் கலப்பிற்கான செயல்திட்டம் 2020-25 உலக சுற்றுச்சூழல் தினத்தன்று (2021 ஜூன் 5) பிரதமர் திரு நரேந்திர மோடியால் வெளியிடப்பட்டது. ஈ20 எரிபொருளை ஏப்ரல் 2023-க்குள் கிடைக்க செய்வதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
2021 ஜூன் 2 அன்று ஈ12 மற்றும் ஈ15 கலப்பிற்கான பிஐஎஸ் வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஈ100 விநியோக சோதனை திட்டத்திற்கான மூன்று இடங்களும் புனேவில் பிரதமரால் தொடங்கப்பட்டது.
தேவை மற்றும் விநியோக பிரச்சினைகளை தீர்க்க எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக, 2025-க்குள் நாட்டின் எத்தனால் சுத்திகரிப்பு திறன் இரட்டிப்பாகி, 20 சதவீத கலப்பு இலக்கு எட்டப்படும் என்று உணவு, பொது விநியோக துறை செயலாளர் கூறினார்.
நாட்டின் பொருளாதாரத்தின் மீது நேர்மறை தாக்கத்தை எத்தனால் கலந்த பெட்ரோல் உண்டாக்கும் என்றும், உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்ட, மாசில்லாத, குறைவில்லாத எரிபொருளாக எத்தனாலை இத்திட்டம் ஊக்குவிக்கும் என்றும் திரு பாண்டே கூறினார். ஈ20 எரிபொருளின் பயன்பாடு கார்பன் மோனாக்சைடு வெளிப்பாட்டை 30-50 சதவீதம் வரையும் ஹைட்ரோகார்பன் வெளிப்பாட்டை 20 சதவீதம் வரையிலும் குறைப்பதால் சுற்றுச்சூழலும், சூழலியலும் மேம்படும் என்று அவர் கூறினார்.
கலப்பு இலக்குகளை எட்டுவதற்காக, சுத்திகரிப்பு திறனை அதிகரிக்குமாறு சர்க்கரை ஆலைகள் மற்றும் சுத்திகரிப்பு நிறுவனங்களை அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. அவர்கள் வங்கி கடன்கள் பெறுவதற்கான வசதிகளை அளித்து வரும் அரசு, வட்டி கழிவில் ஆறு சதவிதம் வரை ஏற்றுக்கொள்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1727206
-----
(Release ID: 1727269)
Visitor Counter : 324