அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

புதிய மற்றும் வளரும் நோய்களை கட்டுப்படுத்துவது சம்பந்தமான ஆராய்ச்சியில் கிரையோஜனிக் எதிர் மின்னணு நுண்ணோக்கி மையங்கள்

Posted On: 14 JUN 2021 4:51PM by PIB Chennai

புதிய மற்றும் வளரும் நோய்களைக் கட்டுப்படுத்துவதற்காக கட்டமைப்பு உயிரியல், நொதியியல் மற்றும் மருந்துகளைக் கண்டுபிடிப்பதில் தலைமைப்பண்பை உருவாக்கும் முயற்சியில் 4 கிரையோஜனிக் எதிர் மின்னணு நுண்ணோக்கி (Cryo-EM) மையங்களை நமது விஞ்ஞானிகள் விரைவில் பெறவுள்ளனர்.

 

கிரையோஜனிக் எதிர் மின்னணு நுண்ணோக்கிகள் அண்மைக் காலங்களில் பெருமூலக்கூறுகளின் கட்டமைப்பு சோதனையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.  இது, தற்கால ஊடுகதிர் படிகவியலை விட சிறந்து விளங்குவதுடன், கட்டமைப்பு உயிரியலாளர்கள், வேதியியல் உயிரியலாளர்கள், மற்றும் தசைநார் கண்டுபிடிப்புக்கான ஓர் புரட்சிகர தொழில்நுட்பத்தின் சான்றாகும். இந்தத் தொழில்நுட்ப முறைக்குக் கடந்த 2017-ஆம் ஆண்டு நோபல் பரிசு அளிக்கப்பட்டது.

கட்டமைப்பு உயிரியல், நொதியியல் மற்றும் மருந்துகளைக் கண்டுபிடிப்பதில் தலைமைப்பண்பை உருவாக்குவதற்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியத்தால் ஆதரவளிக்கப்படும் தேசிய மையங்கள், பெருமூலக்கூறுகளின் கட்டமைப்புகள் மற்றும் ஒன்றிணைந்த உருவமைப்புகளில் ஆய்வுகளை மேற்கொள்ள உதவுவதுடன் இந்தியாவில் கிரையோஜனிக் எதிர் மின்னணு நுண்ணோக்கிகளின் ஆராய்ச்சிக்காக அறிவுசார் ஆய்வுக்கான அடித்தளம் மற்றும் திறன்களை உருவாக்கும்.

சென்னை, மும்பை, கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், கொல்கத்தாவில் உள்ள போஸ் கழகம் ஆகியவற்றில் உருவாக்கப்பட உள்ள இந்த மையங்கள், நாட்டின் அனைத்து மூலைகளிலும் கிரையோஜனிக் எதிர் மின்னணு நுண்ணோக்கிகள் அடிப்படையிலான கட்டமைப்பு உயிரியல் ஆராய்ச்சியை மேம்படுத்தும். கிரையோஜனிக் எதிர் மின்னணு நுண்ணோக்கிகளுக்கான அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரிய தேசிய மையங்கள் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த  மையங்கள் கண்டறியப்பட்டுள்ள முக்கிய இடங்களில் இயங்கும். அனைத்து ஆராய்ச்சியாளர்களும் அணுகும் வகையில் இந்த மையங்கள் செயல்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1726984

*****************

 



(Release ID: 1727014) Visitor Counter : 167


Read this release in: English , Urdu , Hindi , Punjabi