இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் அலுவலகம்
இந்தியாவிற்கான பிராணவாயு திட்டம்
Posted On:
13 JUN 2021 11:11AM by PIB Chennai
மருத்துவப் பிராணவாயுவின் தேவையை எதிர்கொள்வதற்கு பங்குதாரர்கள் மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு வழிவகை செய்வதுதான் இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகத்தின் ‘இந்தியாவிற்கான பிராணவாயு திட்டம்’.
இந்தத் திட்டத்தின் கீழ், அவசரகால மூலப் பொருட்களை தேசிய அளவில் விநியோகிப்பது, சிறிய அளவிலான பிராணவாயு ஆலைகளை நிறுவுவது, அழுத்தும் கருவிகள், பிராணவாயு கருவிகள், செறிவூட்டிகள், செயற்கை சுவாசக் கருவிகள் உள்ளிட்ட இறுதிகட்ட பொருட்களைத் தயாரிப்பது முதலிய பணிகளை தேசிய பிராணவாயுக் கூட்டமைப்பு மேற்கொள்கிறது.
இந்தக் கூட்டமைப்பு, உடனடியான மற்றும் குறுகியகால நிவாரணத்தை அளிப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல், நீண்டகால தேவைக்கான உற்பத்தி சூழலியலை வலுப்படுத்தும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது.
இந்தியாவை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தியாளர்கள், புதுமை நிறுவனங்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் (ஃபிக்கி, மேசா ஆகியவற்றின் கூட்டணியில்) பிராணவாயு ஆலைகள், செறிவூட்டிகள் மற்றும் செயற்கை சுவாசக் கருவிகள் போன்ற அவசரகால உபகரணங்களை ஓர் நிபுணர் குழு மதிப்பீடு செய்கிறது. பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், டாட்டா கன்சல்டிங் பொறியாளர்கள், பெங்களூருவின் சி-கேம்ப், கான்பூர், தில்லி, மும்பை மற்றும் ஹைதராபாத்தின் இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், போபாலில் உள்ள அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான இந்திய கழகம், புனேவின் வென்ச்சர் சென்டர் மற்றும் 40-க்கும் மேற்பட்ட குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், உற்பத்தி மற்றும் விநியோகக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ளன.
இத்திட்டம் குறித்த சந்தேகங்களுக்கு industry-engagement[at]psa[dot]gov[dot]in என்ற மின்னஞ்சலைத் தொடர்பு கொள்ளலாம்.
கொவிட்-19 திட்டங்கள் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு:
https://www.psa.gov.in/innovation-science-bharat
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1726727
*****************
(Release ID: 1726772)