புவி அறிவியல் அமைச்சகம்
அடுத்த ஐந்து நாட்களுக்கு நாட்டின் எந்தப் பகுதியிலும் வெப்ப அலை இருக்காது
Posted On:
12 JUN 2021 4:45PM by PIB Chennai
இந்திய வானிலை துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையத்தின் படி:
(நாள்: 12 ஜூன் 2021, வெளியீட்டு நேரம்: மாலை 4 மணி)
தற்பொதைய தட்பவெட்ப நிலவரம் மற்றும் அடுத்த ஐந்து நாட்களுக்கான முன்னறிவிப்பு
நேற்றைய அதிகபட்ச தட்பவெப்ப நிலவரம்:
வெப்ப அலை: இல்லை
அதிகபட்ச வெப்பநிலை: மேற்கு ராஜஸ்தானின் பெரும்பாலான பகுதிகள், ஹரியானா, சண்டிகர் மற்றும் தில்லியின் பல இடங்கள், கிழக்கு ராஜஸ்தான், பஞ்சாப், மேற்கு மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத்தின் ஒரு சில இடங்களில் 11-06-2021 அன்று அதிகபட்ச வெப்ப நிலை 40.0 ° செண்டிகிரேடுக்கும் அதிகமாக இருந்தது.
அதிகபட்சமாக மேற்கு ராஜஸ்தானில் உள்ள கங்கா நகரில் 44.2 ° செண்டிகிரேட் இருந்தது.
இன்றைய குறைந்தபட்ச தட்பவெப்ப நிலவரம்:
வெப்பமான இரவு: இல்லை
குறைந்தபட்ச வெப்பநிலை: ராஜஸ்தானின் சில பகுதிகளில் 3.1 ° செண்டிகிரேட் முதல் 5.0 ° செண்டிகிரேட் வரையிலும், இமாச்சலப் பிரதேசத்தின் பல இடங்களிலும், ஹரியானா, சண்டிகர், தில்லி, அசாம், மேகாலயா மற்றும் கடலோர ஆந்திரப் பிரதேசத்தின் பல இடங்களிலும் 1.6 ° செண்டிகிரேட் முதல் 3.0 ° செண்டிகிரேட் வரையிலும் இருந்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1726556
-----
(Release ID: 1726591)
Visitor Counter : 200