எஃகுத்துறை அமைச்சகம்

சத்தீஸ்கர் பிலாய் எஃகு ஆலையில் மிகப் பெரிய கொவிட் சிகிச்சை மையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான்

Posted On: 10 JUN 2021 2:21PM by PIB Chennai

சத்தீஸ்கரில் உள்ள செயில் நிறுவனத்தின் பிலாய் எஃகு ஆலையில், 114 படுக்கைகள் கொண்ட கொவிட் சிகிச்சை மையத்தை மத்திய பெட்ரோலியத்துறைஇயற்கை வாயு மற்றும் எஃகு துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்த மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வசதி உள்ளது. இதற்காக எஃகு ஆலையிலிருந்து 1.5 கி.மீ தூரத்துக்கு பைப் லைன் அமைக்கப்பட்டுள்ளதுஇங்கு தற்போது முதல் கட்ட பணி முடிவடைந்துள்ளது. அடுத்த 2 கட்டங்களில் இந்த மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளின் எண்ணிக்கை 500 ஆக அதிகரிக்கப்படும். இந்த மையத்தில் ஆக்ஸிஜன் சேமிப்பு வசதியும் உள்ளது. அதோடு தொலைதூர மருத்துவ ஆலோசனைக்கு இன்டர்நெட் மற்றும் தொலை தொடர்பு வசதிகளும் உள்ளன.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், ‘‘எங்கு தொற்று உள்ளதோ, அங்கு சிகிச்சை அவசியம் என பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். அந்த தொலைநோக்கின் மற்றொரு நடவடிக்கையாகஆக்ஸிஜன் கிடைக்கும் இடத்தில் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 இரண்டாம் அலையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும், நாட்டுக்கு ஆக்ஸிஜன் விநியோகிப்பதிலும்பிலாய் எஃகு ஆலையின் மருத்துவமனை முக்கிய பங்காற்றுகிறது’’ என்றார்

கொவிட்-19 தொற்று சமயத்தில் எஃகுத்துறை  மேற்கொண்ட பல நடவடிக்கைகள் பற்றி இத்துறை இணையமைச்சர் திரு பகன் சிங் குலாஸ்தே எடுத்துக் கூறினார். இந்த விழாவில் இது சம்பந்தமான  குறும்படம் ஒன்றும் வெளியிடப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1725915

----


(Release ID: 1725978) Visitor Counter : 204