அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
தொழில் துறைக்கு சிஎஸ்ஐஆர் அளித்து வரும் ஆதரவை மேம்படுத்த பரிந்துரைத்துள்ள குழுவுடன் மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் சந்திப்பு
Posted On:
09 JUN 2021 6:32PM by PIB Chennai
அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் (சிஎஸ்ஐஆர்) விரிவாக்க குழு செய்துள்ள பரிந்துரைகள் குறித்து மத்திய அறிவியல் & தொழில்நுட்பம், புவி அறிவியல், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தனுக்கு விளக்கப்பட்டது.
இந்த பரிந்துரைகளை செயல்படுத்துவதன் மூலம் 21-ம் நூற்றாண்டுக்கு தயாராக இருக்கும் சர்வதேச போட்டித்திறன் மிக்க அமைப்பாக அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தை உருவாக்க முடியும்.
கூட்டத்தின் போது பேசிய அமைச்சர், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் தலைமையிலான ஒருங்கிணைந்த மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான கனவை, நனவாக்க அறிவுசார் முதலீட்டை பயன்படுத்துதல் மற்றும் அறிவியல் சமூகத்தின் சிறப்பான செயல்திறன் மற்றும் அர்ப்பணிப்பின் மீது அரசு கவனம் செலுத்துவதாகக் கூறினார்.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் கடந்த ஏழு வருடங்களாக தேசத்தின் முன்னுரிமைகளோடு இணக்கத்துடன் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தொழில் மற்றும் கல்வி துறைகளுடன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களின் கூட்டை மேம்படுத்துவதற்காக ‘மக்களுக்காக அறிவியல் மற்றும் அறிவியலுக்காக மக்கள்’ எனும் கொள்கை மீது கவனம் செலுத்த வேண்டும் என்று டாக்டர் ஹர்ஷ் வர்தன் ஆலோசனை தெரிவித்தார்.
ஆராய்ச்சிகளை நோக்கி இளைஞர்களை ஈர்க்க வேண்டும் என்றும், புதிய முயற்சிகளின் பலன்களை பொதுமக்களின் நலனுக்காக பயன்படுத்துவதற்காக பல்வேறு புது நிறுவனங்களுக்கு (ஸ்டார்ட் அப்) அரசு ஆதரவளித்து வருவதாகவும் அவர் கூறினார்.
ஆய்வகங்களில் இருக்கும் உயர்தர உள்கட்டமைப்பின் துணையுடன், மக்களின் தினசரி தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான ஆராய்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
2022-ம் ஆண்டு தனது 75-வது சுதந்திர தினத்தை இந்தியா கொண்டாடும் என்றும், புதிய இந்தியாவுக்கான கனவை நனவாக்க பிரதமரின் லட்சியத்தை சார்ந்து அறிவியல் சமூகம் பணியாற்ற வேண்டும் என்றும் டாக்டர் ஹர்ஷ் வர்தன் கூறினார். புதிய சிஎஸ்ஐஆர் ஆக உருவாகி, 21-ம் நூற்றாண்டுக்கு ஏற்ப சர்வதேச போட்டித்திறனுடன் திகழ்ந்து, சாதாரண மக்களின் பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய திறன் சிஎஸ்ஐஆருக்கு உள்ளது என்று அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1725713
-----
(Release ID: 1725764)
Visitor Counter : 196