தேர்தல் ஆணையம்

புதிய தேர்தல் ஆணையராக திரு அனூப் சந்திர பாண்டே பதவி ஏற்றார்

Posted On: 09 JUN 2021 5:17PM by PIB Chennai

இந்தியாவின் புதிய தேர்தல் ஆணையராக திரு அனூப் சந்திர பாண்டே இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். தலைமை தேர்தல் ஆணையர் திரு சுஷில் சந்திரா மற்றும் தேர்தல் ஆணையர் திரு ராஜிவ் குமார் ஆகியோர் தலைமையிலான மூன்று பேர் கொண்ட அமைப்பில் இரண்டாவது தேர்தல் ஆணையராக திரு பாண்டே இணைந்துள்ளார்.

1959-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி பிறந்த இவர், 1984-ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியாவார். தனது 37 வருட பணியில், மத்திய மற்றும் மாநில அரசுகளில் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் திறம்பட அவர் பணியாற்றியுள்ளார்.

பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் பட்டப்படிப்பும், பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டமும் படித்த திரு பாண்டே, பண்டைய இந்திய வரலாற்று தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

2019 ஆகஸ்டில் உத்தரப் பிரதேச தலைமை செயலாளராக அவர் ஓய்வு பெற்றார். தேர்தல் ஆணையத்தில் இணைவதற்கு முன்னதாக, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் கண்காணிப்பு குழுவின்  உறுப்பினராக உத்தரப் பிரதேசத்தில் அவர் பணியாற்றினார்.

உத்தரப் பிரதேச தலைமை செயலாளராக அவர் பணியாற்றிய போது, அவரது நிர்வாக தலைமையின் கீழ் பிரயாக்ராஜில் கும்ப மேளாவையும், வாரணாசி திவாசில் பரவசி பாரதிய நிகழ்ச்சியையும் அம்மாநிலம் வெற்றிகரமாக நடத்தியது.

எழுத்து ஆர்வம் மிக்கவரான திரு பாண்டே, ‘பண்டைய இந்தியாவில் ஆட்சிமுறைஎன்ற புத்தகத்தை எழுதியுள்ளார்

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1725661

 

------


(Release ID: 1725693) Visitor Counter : 276