புவி அறிவியல் அமைச்சகம்
வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்கத்தில் இமயமலை, சிக்கிமில் முன்னேற்றமடைந்துள்ளது தென்மேற்கு பருவமழை
Posted On:
06 JUN 2021 4:34PM by PIB Chennai
இந்திய வானிலை ஆராய்ச்சி துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் விடுத்துள்ள செய்தி:
(நாள்: ஜூன் 6, 2021, நேரம்: இந்திய நேரப்படி பிற்பகல் 2:30)
• மத்திய அரபிக் கடலின் பல பகுதிகள், மகாராஷ்டிராவின் ஒருசில பகுதிகள், ஒட்டுமொத்த கர்நாடகா, தெலுங்கானாவின் ஒரு சில இடங்கள், ஒட்டுமொத்த தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசத்தின் ஒரு சில பகுதிகள், மத்திய மற்றும் வடமேற்கு வங்ககடலின் பெரும்பாலான பகுதிகள், அனைத்து வடகிழக்கு மாநிலங்கள் (நாகாலாந்து மணிப்பூர் மிசோரம் திரிபுரா அசாம் மேகாலயா அருணாச்சலப் பிரதேசம்), மேற்கு வங்கத்தில் உள்ள இமாலய பகுதி மற்றும் சிக்கிமின் பெரும்பாலான பகுதிகளில் தென்மேற்கு பருவமழை இன்று (2021, ஜூன் 6) மேலும் முன்னேற்றம் அடைந்துள்ளது.
• இன்று காலை 8:30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின் அளவு: திருமயம் (புதுக்கோட்டை மாவட்டம்)- 19, திரிபுரா, காங்டாக்- தலா 11, ஷிராலி, அனந்தபூர்- தலா 10, மன்கி, பத்கல், சிக்கமங்களூரு, கடப்பா, பெரம்பலூர்- தலா 9, தானே, கிழக்கு காசி மலை,ரேவா, ஹோனாவர்- தலா 8, ராய்கட், வடகாவோன் (புனே), அகர்தலா, கடலூர்- தலா 7, திருப்பதி- 6.
• மேற்கு வங்கத்தில் உள்ள இமாலய பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தென்மேற்கு பருவ காற்று மற்றும் சூறாவளி சுழற்சி வலுவடைந்து வருவதன் காரணமாக, வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள கிழக்கு இந்திய பகுதிகளில் அடுத்த 4-5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும். ஜூன் 6 மற்றும் 8-ஆம் தேதிகளில் அருணாச்சலப்பிரதேசம், ஜூன் 8 மற்றும் 9-ஆம் தேதிகளில் அசாம், மேகாலயா மேற்கு வங்கத்தில் உள்ள இமாலய பகுதிகள் மற்றும் சிக்கிம், ஜூன் 6 மற்றும் 7-ஆம் தேதிகளில் நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுரா, ஜூன் 8 மற்றும் 9ம் தேதிகளில் ஒடிசா,10-ஆம் தேதி மேற்குவங்கத்தில் உள்ள கங்கை நதி பாயும் பகுதிகளின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். ஜூன் 6-ஆம் தேதி அசாம், மேகாலயா மற்றும் மேற்கு வங்கத்தில் இமாலய பகுதிகள், சிக்கிம், ஜூன் 10-ஆம் தேதி ஒடிசாவின் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1724937
------
(Release ID: 1724959)
Visitor Counter : 195