பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் மற்றும் சொத்துக்களினால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள வலுவான சர்வதேச ஒத்துழைப்பு தேவை: இந்தியா

Posted On: 05 JUN 2021 7:00PM by PIB Chennai

சர்வதேச அதிகார வரம்புகளை கடக்கும் தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் மற்றும் சொத்துக்களினால் ஏற்படும் மற்றுமொரு தீவிர வளர்ந்து வரும் சவாலை உலகம் தற்போது எதிர்கொண்டு வருகிறது என்று இந்தியா கூறியுள்ளது.

ஊழலை எதிர்த்து போராடுவதில் உள்ள சவால்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்த ஐக்கிய நாடுகள் பொது சபையின் சிறப்பு கூட்டத்தில் நேற்றிரவு பேசிய மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இத்தகைய குற்றங்களில் ஈடுபட்ட நபர்களை சொந்த நாட்டுக்கு திரும்ப அனுப்புதல் மற்றும் சொத்துக்கள் தொடர்பாக வலுவான மற்றும் ஒற்றுமை மிக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை என்று கூறினார்.

குற்றம் சாட்டப்பட்ட நபர் வெளிநாடுகளில் தஞ்சமடைந்து பல்வேறு தேசங்களின் அதிகார வரம்புகளில் உள்ள சிக்கலான சட்ட அமைப்புகளில் ஒளிந்து கொண்டு, இதிலுள்ள சர்வதேச ஒத்துழைப்பின் பலவீனங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் அரசியல் பிரகடணத்தை சார்ந்து இந்த சவாலை சரியான பாதையில் எடுத்து சென்று, முயற்சிகளையும் நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தி வரும் நாடுகளுக்கு இந்தியாவின் பாராட்டை அமைச்சர் தெரிவித்தார்.

ஊழலை இந்தியா சிறிதும் பொறுத்துக் கொள்ளாதென்று கூறிய டாக்டர் ஜிதேந்திர சிங், வெளிப்படைத்தன்மை மற்றும் மக்கள் சார்புத்தன்மைக்கு முக்கியத்துவம் அளித்து பிரதமர் வழங்கிய குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆளுகைஎனும் செயல்முறையை குறிப்பிட்டார்.

குறிப்பாக தற்போதைய நெருக்கடி காலத்தில் ஊழலை கட்டுப்படுத்துவதற்கான உறுதி வேண்டும் என்று கூறிய டாக்டர் ஜிதேந்திர சிங், ஊழலுக்கு எதிரான கொள்கைகளை தீவிரமாக செயல்படுத்துவதில் இதர நாடுகள், சமூக அமைப்பு மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயாராக உள்ளது என்றும் தமது உரையை நிறைவு செய்யும் போது தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1724755

*****************


(Release ID: 1724797) Visitor Counter : 239