பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்

மாதிரி பஞ்சாயத்து மக்கள் சாசனத்தை மத்திய ஊரக வளர்ச்சி, வேளாண், விவசாயிகள் நலன் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் வெளியிட்டார்

Posted On: 04 JUN 2021 6:01PM by PIB Chennai

29 துறைகளில் சேவைகளை வழங்குவதற்கான மக்கள் சாசனம்/கட்டமைப்பின் மாதிரி பஞ்சாயத்து மக்கள் சாசனத்தை மத்திய ஊரக வளர்ச்சி, வேளாண், விவசாயிகள் நலன் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் வெளியிட்டார்.

செயல்பாடுகளை உள்ளூர்மயமாக்கப்பட்ட நீடித்த வளர்ச்சி இலக்குகளுடன் இணைக்கும் இந்த சாசனம், தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்துடன் இணைந்து பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

காணொலி மூலம் சாசனத்தை வெளியிட்டு பேசிய அமைச்சர், கொவிட்-19 பெருந்தொற்றை அடிமட்ட அளவில் தடுப்பதில் பஞ்சாயத்துகளின் முக்கிய பங்கை எடுத்துரைத்தார். மக்களின் தினசரி வாழ்க்கை தொடர்புடைய பல்வேறு முக்கிய பணிகள் பஞ்சாயத்துகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சேவைகளை சரியான நேரத்தில் வழங்கி, மக்கள் குறைகளை தீர்த்து, அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக மக்கள் சாசனம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ராஜஸ்தான் முதல்வர் மற்றும் அசாம், பிகார், சத்தீஸ்கர், ஹரியானா, ஹிமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், சிக்கிம், தமிழ்நாடு, உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1724464

-----(Release ID: 1724575) Visitor Counter : 153