சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

முதியோர்களுக்கான சேவைகளை அளிக்கும் சேஜ் இணையதளம்: மத்திய அமைச்சர் தொடக்கம்

Posted On: 04 JUN 2021 4:28PM by PIB Chennai

முதியோர்களுக்கான சேவைகளை அளிக்கும் சேஜ் (முதியோர் பராமரிப்பு வளர்ச்சி இயந்திரம் -SAGE)இணையதளத்தை  மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை  அமைச்சர் திரு.தவார்சந்த் கெலாட் இன்று தொடங்கிவைத்தார். அப்போது இத்துறை இணையமைச்சர் திரு ராம்தாஸ் அத்வாலே உடனிருந்தார்

இந்த சேஜ் இணையதளத்தில் முதியோர் பராமரிப்புக்கான அனைத்து பொருட்களையும் வாங்க முடியும், மற்றும் தொடக்க நிறுவனங்கள் அளிக்கும் நம்பகமான சேவைகளையும் பெற முடியும். இந்த சேஜ் இணையதளத்தில் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு. தவார்சந்த் கெலாட் கூறியதாவது:

சமூகத்தில் பல தரப்பினரின் நலனுக்காக, பல திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி கொண்டு வந்துள்ளார். அனைவருக்குமான ஒருங்கிணைந்த வளர்ச்சியின் கீழ், அனைத்து வயது பிரிவினருக்கான செயல் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்துகிறதுநாட்டில் முதியோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறதுஇவர்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். இதற்காக மூத்த குடிமக்கள் நல நிதி, கடந்த 2016ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

குழு பரிந்துரை அடிப்படையில் முதியோர் பராமரிப்புக்காக தொடக்க நிறுவனங்களுக்கு ரூ.1 கோடி வழங்கப்படும். தொடக்க நிறுவனங்கள் அளிக்கும், இந்த சேவைகளை பெற மூத்த குடிமக்கள் முன்வந்து, சுறுசுறுப்பான மற்றும் கவுரவமான வாழ்க்கையை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1724425

***


(Release ID: 1724509) Visitor Counter : 325