ரெயில்வே அமைச்சகம்
தென் மாநிலங்களுக்கு ரயில்கள் மூலம் விநியோகிக்கப்பட்ட ஆக்ஸிஜன் 10,000 மெட்ரிக் டன்களை கடந்தது : தமிழகத்துக்கு 2,711 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் விநியோகம்
Posted On:
04 JUN 2021 2:31PM by PIB Chennai
இந்திய ரயில்வே இதுவரை, பல மாநிலங்களுக்கு 1463-க்கும் மேற்பட்ட டேங்கர்களில், 24,840 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜனை, விநியோகித்துள்ளது.
இதுவரை 359 ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தங்கள் பயணத்தை முடித்துள்ளன. தற்போது 30 டேங்கர்களில் 587 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனுடன் 6 ரயில்கள் சென்று கொண்டிருக்கின்றன.
தென்மாநிலங்களுக்கு ரயில்கள் மூலம் விநியோகிக்கப்பட்ட ஆக்ஸிஜன் அளவு 10,000 மெட்ரிக் டன்களை கடந்தது.
தென் மாநிலங்களில் ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் தலா 2,500 மெட்ரிக் டன்னுக்கும் மேற்பட்ட ஆக்ஸிஜன்களை பெற்றுள்ளன.
இதுவரை மகாராஷ்டிராவுக்கு 614, உத்தரப் பிரதேசத்துக்கு 3,797, மத்தியப் பிரதேசத்துக்கு 656, தில்லிக்கு 5,826, ஹரியானாவுக்கு 2,135, ராஜஸ்தானுக்கு 98, கர்நாடகாவுக்கு 2,870, உத்தரகாண்ட்டுக்கு 320, தமிழகத்துக்கு 2,711, ஆந்திரப்பிரதேசத்துக்கு 2,528, பஞ்சாப்புக்கு 225, கேரளாவுக்கு 513, தெலங்கானாவுக்கு 2,184, ஜார்கண்ட்டுக்கு 38, அசாமுக்கு 320 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்ஸிஜன், ஆக்ஸிஜன்கள் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இன்னும் பல ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று இரவு புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1724375
----
(Release ID: 1724448)
Visitor Counter : 190