பாதுகாப்பு அமைச்சகம்
கடற்படை மற்றும் பாதுகாப்பு படை ஊழியர்களுக்கான இணை செயலாளராக ரியர் அட்மிரல் கபில் மோகன் திர் நியமனம்
प्रविष्टि तिथि:
04 JUN 2021 11:32AM by PIB Chennai
ராணுவ விவகாரங்கள் துறையில் கடற்படை மற்றும் பாதுகாப்பு படை ஊழியர்களுக்கான இணை செயலாளராக ரியர் அட்மிரல் கபில் மோகன் திர் பொறுப்பேற்றார். இந்த பணியில் பொறுப்பேற்கும் முதல் பாதுகாப்புப்படை அதிகாரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
புனே கதக்வஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயிற்சி முடித்த இவர், கடந்த 1985ம் ஆண்டு இந்திய கடற்படையில் சேர்ந்தார்.
கடற்படை கமாண்டோ பிரிவின் மிக மூத்த அதிகாரியான இவர் ஐஎன்எஸ் அபிமன்யூ கடற்படை தளம், ஐஎன்எஸ் கன்ஜர் மற்றும் ரானா ஆகிய போர்கப்பல்களிலும் பணியாற்றியுள்ளார்.
ஆபரேஷன் பவன், ஆபரேஷன் ஜூபிடர் போன்ற அமைதிப்பணி நடவடிக்கையிலும் அவர் ஈடுபட்டுள்ளார். கடற்படையில் பல முக்கிய பொறுப்புகளை வகித்த இவர், விசிஷ்ட் சேவா, அதி விசிஷ்ட் சேவா ஆகிய பதக்கங்களை பெற்றுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID= 1724306
-----
(रिलीज़ आईडी: 1724393)
आगंतुक पटल : 259