எரிசக்தி அமைச்சகம்
சந்தையை அடிப்படையாகக் கொண்டு குறைந்த விலையில் எரிசக்தியை விநியோகிப்பது தொடர்பான விவாத அறிக்கை பங்குதாரர்களுக்கு அனுப்பிவைப்பு
प्रविष्टि तिथि:
03 JUN 2021 4:59PM by PIB Chennai
சந்தையை அடிப்படையாகக் கொண்டு குறைந்த விலையில் எரிசக்தியை விநியோகிப்பது தொடர்பான விவாத அறிக்கையை மத்திய எரிசக்தி அமைச்சகம் ஜூன் 1-ஆம் தேதி அனைத்து பங்குதாரர்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக அனுப்பி வைத்துள்ளது.
செயல்படுத்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள இயக்கமுறை, இயக்க முறையினால் ஏற்படும் பயன்களின் மதிப்பீடு, முக்கிய விஷயங்கள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட தடுப்பு முறைகள், எதிர்காலத்திற்கான திட்டங்கள் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன. கருத்துக்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 30 ஆகும்.
இந்த விவாத அறிக்கையின் வாயிலாக 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்பட உள்ள சந்தையை அடிப்படையாகக் கொண்டு குறைந்த விலையில் எரிசக்தியை விநியோகிக்கும் திட்டத்தை ஆக்கபூர்வமாகக் கொண்டு செல்வதற்கு அனைத்து பங்குதாரர்களின் ஆலோசனைகளை மத்திய எரிசக்தி அமைச்சகம் கோருகிறது.
ஒட்டுமொத்த தேவையை எதிர்கொள்வதற்காக குறைந்த விலையிலான வளங்களை நாடு முழுவதும் பயன்படுத்துவதை இந்தத் திட்டம் உறுதி செய்து, அதன் மூலம் விநியோக நிறுவனங்களும் உற்பத்தியாளர்களும் பயனடைவதுடன், மின்சார நுகர்வோருக்கு ஆண்டுக்கு ரூ. 12,000 கோடி சேமிக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மாநிலங்கள் மற்றும் மண்டல எல்லைகளினுள்ளே தற்போது பின்பற்றப்படும் நடைமுறைகளுக்கு மாறாக தேசிய அளவில் வளங்களைப் பயன்படுத்துகையில் இதன் முழுப் பலன் உணரப்படும். எனவே மின்சார விநியோக முறைகளை சீரமைப்பதன் அடுத்தகட்டம், “ஒரே தேசம், ஒரே தொகுப்பு, ஒரே அலைவரிசை, ஒரே விலை” என்ற கட்டமைப்பை நோக்கி சந்தையை அடிப்படையாகக் கொண்டு குறைந்த விலையில் எரிசக்தியை விநியோகிக்கும் திட்டத்தை அமல்படுத்துவதாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1724062
*****************
(रिलीज़ आईडी: 1724158)
आगंतुक पटल : 212