வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

நாட்டின் மே மாதம் வர்த்தக செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி

Posted On: 03 JUN 2021 2:06PM by PIB Chennai

நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி தொடர்ந்து ஈர்க்கக் கூடிய வகையில் உள்ளதாகவும், இந்தாண்டின் மே மாத ஏற்றுமதி, கடந்தாண்டு இதே கால அளவை விட 67.39 சதவீதம் அதிகமாகவும், 2019ம் ஆண்டு மே மாதத்தைவிட 7.93 சதவீதம் அதிகமாகவும் உள்ளதாக ஆரம்பகட்ட தரவுகள் தெரிவிப்பதாக வர்த்தக செயலாளர் டாக்டர் அனுப் வாதவன் கூறியுள்ளார்.

பெட்ரோலியப் பொருட்கள், ஆபரணக் கற்கள் மற்றும் நகை தவிர மற்ற பொருட்களின் வணிக ஏற்றுமதி இந்தாண்டு மே மாதத்தில், கடந்தாண்டு இதே காலத்தைவிட 45.96 சதவீதமும், 2019ஆண்டு மே மாதத்தை விட 11.51 சதவீதமும் அதிகரித்துள்ளது.

இறக்குமதியும், இந்தாண்டு மே மாதத்தில் 68.54 சதவீதம் என்ற அளவில் சாதகமான வளர்ச்சியை கண்டுள்ளது. கடந்தாண்டு மே மாதத்தை விட, இறக்குமதி 17.47 சதவீதம் குறைந்துள்ளது. 

சேவை ஏற்றுமதி இந்தாண்டு மே மாதத்தில் 27.85 பில்லியன் அமெரிக்க டாலராக பதிவாகியுள்ளது. கடந்தாண்டு இதே கால அளவை விட 6.44 சதவீதம் அதிகரித்துள்ளது. சேவை இறக்குதி 9.97 பில்லியன் அமெரிக்க டலராக பதிவாகியுள்ளது. மே மாதத்துக்கு நிகர சேவை ஏற்றுமதி மதிப்பில் 7.88 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்தாண்டு இதே கால அளவை விட 15.39 சதவீதம் அதிகம்.

 

இரும்புத்தாது ஏற்றுமதி 2020-2021ம் ஆண்டிலும், 2021-22-ம் ஆண்டின் முதல் 2 மாதங்களிலும் தொடர்ந்து அதிகரித்துள்ளது. அரசு ஏற்றுமதியும் 2020ம் ஆண்டு ஏப்ரல் தவிர, 2020-21 மற்றும் இந்த நிதியாண்டின் ஏப்ரல், மற்றும் மே மாதங்களில் தொடர்ந்து வளர்ச்சி கண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1724012

*****************


(Release ID: 1724071) Visitor Counter : 201