வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
2020-21 ஆம் ஆண்டில் இந்தியாவின் கடல்சார் பொருட்களின் ஏற்றுமதி: 11,49,341 மெட்ரிக் டன்
Posted On:
03 JUN 2021 2:04PM by PIB Chennai
கொவிட் பெருந்தொற்று மற்றும் வெளிநாட்டு சந்தைகளின் மந்த நிலையால் இந்திய கடல் உணவுத் துறையின் ஏற்றுமதி சரிவை சந்தித்துள்ளது. நிதி ஆண்டு 2020-21-இல் ரூ. 43,717.26 கோடி மதிப்பில் 11,49,341 மெட்ரிக் டன் கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இது கடந்த ஆண்டின் அளவை விட 10.88% குறைவாகும்.
அமெரிக்கா, சீனா மற்றும் ஐக்கிய ஐரோப்பிய நாடுகளுக்கு பெரும்பாலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களில் உறைந்த இறால் மிக அதிக அளவிலும், அதைத்தொடர்ந்து உறைந்த மீனும் அதிகமாக ஏற்றுமதி செய்யப்பட்டன.
கடந்த 2019-20 ஆம் ஆண்டில் ரூ. 46,662.85 கோடி மதிப்பில் 12,89,651 மெட்ரிக் டன் கடல் உணவை இந்தியா ஏற்றுமதி செய்து, 2020-21 ஆம் ஆண்டில் ரூபாயின் மதிப்பில் 6.31 சதவீதமும், டாலரின் மதிப்பில் 10.81 சதவீதமும் வீழ்ச்சி அடைந்தது.
“பெருந்தொற்றின் காரணமாக ஆண்டின் முதல் பாதியில் கடல் உணவுகளின் ஏற்றுமதி பெரிதும் பாதிப்படைந்தது, எனினும் 2020-21 ஆம் வருடத்தின் இறுதி காலாண்டில் மீட்சியடைந்தது. மேலும் இந்த நிதி ஆண்டில் டாலர் மதிப்பில் 67.99%மும், எண்ணிக்கையின் அடிப்படையில் 46.45 சதவீதமும் ஏற்றுமதி செய்து, 2019-20 ஆம் ஆண்டைவிட முறையே 4.41 சதவீதம் மற்றும் 2.48 சதவீதம் அதிகரித்து மீன் வளர்ப்புத் துறை சிறப்பான பங்களிப்பை வழங்கியது”, என்று கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையகத்தின் தலைவர் திரு கே எஸ் ஸ்ரீநிவாஸ் கூறினார்.
உறைந்த இறால், எண்ணிக்கையில் 51.36 சதவீதமும், மொத்த டாலரின் வருவாயில் 74.31 சதவீதமும் பங்கு வகித்தது. அமெரிக்கா (2,72,041 மெட்ரிக் டன்), அதைத்தொடர்ந்து சீனா (1,01,846 மெட்ரிக் டன்), ஐக்கிய ஐரோப்பா (70,133 மெட்ரிக் டன்), ஜப்பான் (40,502 மெட்ரிக் டன்), தென் கிழக்கு ஆசியா (38,389 மெட்ரிக் டன்) மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் (29,108 மெட்ரிக் டன்) ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1724011
*****************
(Release ID: 1724054)
Visitor Counter : 222