கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
தீன்தயாள் துறைமுக பொறுப்பு கழக மருத்துவமனையில் ஆக்சிஜன் ஆலை மற்றும் தீயணைப்பு அமைப்பை மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா திறந்து வைத்தார்
Posted On:
02 JUN 2021 5:27PM by PIB Chennai
கோபாலபுரி, காந்திதாமில் (கட்ச்) உள்ள தீன்தயாள் துறைமுக பொறுப்பு கழக மருத்துவமனையில் ஆக்சிஜன் ஆலை மற்றும் தீயணைப்பு அமைப்பை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு மன்சுக் மாண்டவியா காணொலி மூலம் இன்று திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆக்சிஜன் ஆலைக்கான பணிகளை வெறும் 20 நாட்களில் முடித்ததற்காக துறைமுக குழுவையும் இதர பங்குதாரர்களையும் பாராட்டினார். பெருந்தொற்றின் போது அனைத்து துறைமுகங்களும் திறம்பட பங்காற்றியது குறித்து பாராட்டு தெரிவித்த அமைச்சர், ஆக்சிஜன் விநியோகம், கொவிட்-19 தொடர்பான பொருட்களின் போக்குவரத்துக்கு முன்னுரிமை மற்றும் துறைமுக கட்டணங்களின் தள்ளுபடி ஆகியவற்றின் மூலம் கொரோனாவுக்கு எதிரான நாட்டின் போரில் துறைமுகங்கள் முக்கிய பங்காற்றுவதாக கூறினார்.
பெருந்தொற்றின் போது இத்தகைய ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை நிறுவியுள்ள முதல் முக்கிய துறைமுகம் தீன்தயாள் துறைமுகம் ஆகும். மின்சாரத் தடை ஏற்படும் பட்சத்தில் ஆக்சிஜன் ஆலை விநியோக அமைப்பில் இருந்து தானியங்கி முறையில், ஆக்சிஜன் சிலிண்டர் வங்கி விநியோக அமைப்புக்கு மாறி கொள்ளும் வகையில், பிராணவாயு சிலிண்டர்களுக்கான வங்கி ஒன்றும் இங்கு உருவாக்கப்பட்டுள்ளது.
துறைமுக காலனி மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள நவீன தீயணைப்பு அமைப்பு, தீ எச்சரிக்கை, புகை கண்டறிதல் மற்றும் தீயணைப்பு தெளிப்பு முறை ஆகிய வசதிகளை கொண்டுள்ளது. மருத்துவமனையின் வார்டுகள் மற்றும் அறைகளில் தானியங்கி தீயணைப்பு வசதி மற்றும் தீயணைப்பான்கள் நிறுவப்பட்டுள்ளன.
*****************
(Release ID: 1723834)
Visitor Counter : 255