பாதுகாப்பு அமைச்சகம்

உத்தரகாண்ட்டில் 500 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மருத்துவமனை : டிஆர்டிஓ தொடங்கியது

प्रविष्टि तिथि: 02 JUN 2021 1:18PM by PIB Chennai

உத்தரகாண்ட் மாநிலம் ஹால்ட்வானி பகுதியில், 500 படுக்கைகள் கொண்ட கொவிட் சிகிச்சை மருத்துவமனையை ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையம்(டிஆர்டிஓ) ஏற்படுத்தியது. இதை உத்தரகாண்ட் முதல்வர் திரு தீரத் சிங் ராவத் இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார். 

இங்கு 375 ஆக்ஸிஜன் படுக்கைகளும், 125 ஐசியு படுக்கைகள் வென்டிலேட்டருடனும்  உள்ளன.  இங்கு ஜெனரேட்டர் வசதியுடன், அனைத்து பருவநிலைக்கும் ஏற்ற வகையில் முழுவதும் ஏ.சி வசதி செய்யப்பட்டுள்ளது. இது தவிர பரிசோதனை கூடங்கள், மருந்தகம், எக்ஸ்ரே மற்றும் இசிஜி வசதி ஆகியவையும் இங்கு உள்ளன. இந்த மருத்துவமனை நாளை முதல் செயல்படுகிறது.

இந்த மருத்துவமனை அமைக்கும் பணியில் 350 பேர், 24 மணி நேரமும் பணியாற்றிமோசமான வானிலையிலும், 21 நாட்களில் அனைத்து பணிகளையும் முடித்துள்ளனர். 

இந்த தொற்று நேரத்தில் சரியான நேரத்தில் உதவியதற்காக, டிஆர்டிஓ அமைப்பை பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பாராட்டியுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1723653

*****************


(रिलीज़ आईडी: 1723765) आगंतुक पटल : 250
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Telugu