பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையு யூனியன் பிரதேசங்களில் வன் தன் திட்டம் இந்தாண்டு விரிவுபடுத்தப்படுகிறது
प्रविष्टि तिथि:
01 JUN 2021 6:09PM by PIB Chennai
வன் தன் திட்டத்தின் முன்னேற்றத்தை ஆய்வு செய்வதற்காக மாநில அளவிலான இணைய கருத்தரங்களை தொடர்ந்து நடத்தி வரும் டிரைஃபெட், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி,சஜ டாமன் மற்றும் டையு யூனியன் பிரதேசங்களின் மாநில குழுக்கள் மற்றும் வன் தன் விகாஸ் கேந்திரங்களுடான அமர்வை சமீபத்தில் நடத்தியது.
தற்சமயம் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள வன் தன் விகாஸ் கேந்திரத்தில் இருந்து இந்த வருட இறுதிக்குள் 10 வன் தன் விகாஸ் கேந்திர குழுக்களை உருவாக்குவதற்கான பணிகள் முழு மூச்சுடன் நடைபெற்று வருவதாக கூட்டத்தில் கலந்து கொண்ட முகமைகள் தெரிவித்தன.
நிகழ்ச்சியில் பேசிய டிரைஃபெட் நிர்வாக இயக்குநர் திரு பிரவிர் கிருஷ்ணா, சிறிய அளவிலான வன பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தை செயல்படுத்துவதற்கான முக்கியத்துவம் குறித்து பேசினார். பெருந்தொற்று காலத்தில் முழுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளோடு பழங்குடியின மக்களின் வேலைவாய்ப்பு மற்றும் வருவாய்க்கு வன் தன் மற்றும் இதர திட்டங்கள் உதவி வருவதாக அவர் தெரிவித்தார்.
சிறிய அளவிலான வன பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தை செயல்படுத்துவதின் முன்னேற்றம் குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. இந்த வருடத்திற்குள் குறைந்தது 10 வன் தன் விகாஸ் கேந்திர குழுக்களை உருவாக்க முடிவெடுக்கப்பட்டது. இரண்டு ஸ்ஃபுர்தி குழுக்களும் திட்டமிடப்பட்டுள்ளன.
யூனியன் பிரதேசத்தில் உள்ள பால்வள கூட்டுறவு அமைப்பின் சுய உதவிக் குழுக்களை வன் தன் திட்டத்துடன் இணைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. டிரைஃபுட் பூங்கா மற்றும் நியூ டிரைப்ஸ் இந்தியா விற்பனைக் கூடத்தை தொடங்கவும் ஆலோசிக்கப்பட்டது.
*****************
(रिलीज़ आईडी: 1723492)
आगंतुक पटल : 291