நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய நிறுவனம்: “ஒரே தேசம் ஒரே தர அளவின்” கீழ் தர மேம்பாட்டு நிறுவனம் என்ற அங்கீகாரத்தைப் பெறும் முதல் நிறுவனம்

Posted On: 01 JUN 2021 1:39PM by PIB Chennai

நுகர்வோர் விவகாரங்கள் துறையின் கீழ் இயங்கும் இந்திய தர நிர்ணய அமைப்பின் இயக்கமான ஒரே தேசம் ஒரே தர அளவின்கீழ் தர மேம்பாட்டு நிறுவனம் என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ள முதல் நிறுவனம் என்ற பெருமையை இந்திய ரயில்வேயின்  ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய நிறுவனம் பெற்றுள்ளது.

இந்திய அரசின் தொலைநோக்குத் திட்டமான ஒரே தேசம் ஒரே தர அளவைஅடைவதற்காக, தேசிய தர நிர்ணய அமைப்பான இந்திய தர நிர்ணய அமைப்பு, “தர மேம்பாட்டு நிறுவனத்தை அங்கீகரிக்கும்திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் வாயிலாக, நாட்டில் குறிப்பிட்ட துறைகளில் தர நிர்ணய மேம்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பல்வேறு நிறுவனங்களின் செயல்திறனை ஒருங்கிணைத்து, இந்தியாவில் உள்ள அனைத்து தர மேம்பாட்டு நடவடிக்கைகளையும் இணைப்பதன் மூலம் ஒரு பிரிவிற்கு ஒரே தேசிய தர அளவுஎன்பதை உருவாக்குவதை இந்திய தர நிர்ணய அமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.

ரயில்வே அமைச்சகத்தின் ஆராய்ச்சி மற்றும்  மேம்பாட்டின் ஒரே பிரிவான லக்னோவில் உள்ள ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய நிறுவனம், ரயில்வே துறையில் தர நிர்ணயப் பணிகளை மேற்கொள்ளும் இந்தியாவின் முன்னணி அமைப்பாகும்.

இந்திய தர நிர்ணய அமைப்பின் தர மேம்பாட்டு நிறுவனத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக, ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய நிறுவனம் முன்முயற்சிகளை மேற்கொண்டது. இந்த முயற்சியில் உலக வர்த்தக அமைப்பு-வர்த்தகத்திற்கான தொழில்ரீதியான தடைகள் (WTO-TBT) வழிவகுத்த சிறந்த நடைமுறை விதிகளின் அடிப்படையிலும், தர மேம்பாட்டு நிறுவன அங்கீகாரம் பெறுவதற்கு இந்திய தர நிர்ணய அமைப்பு விதித்துள்ள வரைமுறைகளைப் பின்பற்றியும் ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய நிறுவனம், தனது தர நிர்ணய நடைமுறைகளை மறு ஆய்வு செய்தது.

இந்த அங்கீகாரம் 3 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும், அதற்குப் பிறகு புதுப்பிக்கப்பட்ட வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1723360

***************

 



(Release ID: 1723406) Visitor Counter : 239