எஃகுத்துறை அமைச்சகம்
மிகப்பெரிய கொவிட் பராமரிப்பு மையத்தை செயில் நிறுவனத்தின் துர்காப்பூர் ஆலையில் திரு தர்மேந்திர பிரதான் திறந்து வைத்தார்; பிரதமரின் ‘அனைவருக்குமான நலன்...’ தத்துவத்துடன் சார்ந்திருப்பதாக பெருமிதம்
இடுகை இடப்பட்ட நாள்:
31 MAY 2021 7:49PM by PIB Chennai
செயில் நிறுவனத்தின் துர்காப்பூர் எஃகு ஆலையில் 200 படுக்கைகளுடன் கூடிய மிகப்பெரிய கொவிட் பராமரிப்பு மையத்தை மத்திய எஃகு மற்றும் பெட்ரோலிய & இயற்கை எரிவாயு அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இன்று திறந்து வைத்தார்.
எஃகு துறை இணை அமைச்சர் திரு ஃபக்கன் சிங் குலஸ்தே, மேற்கு வங்க சட்டம் மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் திரு மொலோய் கடக், நாடளுமன்ற உறுப்பினர் திரு எஸ் எஸ் அலுவாலியா மற்றும் மூத்த அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஆலையில் இருந்து நேரடியாக கொவிட் பராமரிப்பு மையத்திற்கு ஆக்சிஜன் கொண்டு செல்லப்படும்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு பிரதான், பெருந்தொற்றை எதிர்த்து போராடுவதில் செயில் நிறுவனத்தின் துர்காப்பூர் மற்றும் பர்ன்பூர் ஆலைகள் சிறப்பாக செயல்படுவதாகவும், இப்பகுதியில் கொவிட் தொடர்பான உள்கட்டமைப்பை மத்திய அரசு மேம்படுத்தும் என்றும் கூறினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் ‘அனைவருடனும், அனைவரின் நன்மைக்காகவும், அனைவரின் நம்பிக்கையுடனும்’ எனும் தத்துவத்தை இம்மையம் சார்ந்திருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
**
(வெளியீட்டு அடையாள எண்: 1723274)
வருகையாளர் எண்ணிக்கை : 220