பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
கொவிட் பெருந்தொற்றின் காரணமாக குடும்ப ஓய்வூதிய விதிகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன: டாக்டர் ஜிதேந்திர சிங்
प्रविष्टि तिथि:
31 MAY 2021 7:08PM by PIB Chennai
கொவிட் பெருந்தொற்றின் காரணமாக குடும்ப ஓய்வூதிய விதிகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன என்று வட கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான திரு ஜிதேந்திர சிங் இன்று கூறினார்.
கொவிட்-19 பெருந்தொற்றின் போது ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத் துறை எடுத்துள்ள முக்கிய சீர்திருத்தங்கள் குறித்து விளக்கிய அவர், குடும்ப ஓய்வூதியத்திற்கான கோரிக்கை மற்றும் இறப்பு சான்றிதழ் கிடைத்தவுடன், வேறு எதற்கும் காத்திராமல் குடும்ப ஓய்வூதியத்திற்கான ஒப்புதல் வழங்கப்பட வேண்டும் என்ற விதி சமீபத்தில் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.
பெருந்தொற்றின் போது நிகழ்ந்த கொவிட் மற்றும் கொவிட் சாராத இறப்புகளுக்கு இது பொருந்தும் என்று அவர் கூறினார்.
ஓய்வு பெற்றத்தில் இருந்து ஒரு வருடம் வரை தற்காலிக ஓய்வூதியம் வழங்குவதற்கான காலகட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
-----
(रिलीज़ आईडी: 1723270)
आगंतुक पटल : 305