நிதி அமைச்சகம்

மத்திய அரசின் 2020-21ம் நிதியாண்டுக்கான (தற்காலிக / தணிக்கை செய்யப்படாத) வரவு, செலவு கணக்குகள்

प्रविष्टि तिथि: 31 MAY 2021 5:06PM by PIB Chennai

2020-21ம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் கணக்குகள் ( தற்காலிகம்/ தணிக்கை செய்யப்படாதவை) ஒருங்கிணைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின் முக்கிய அம்சங்கள்:

 

மத்திய அரசு 2020-21ம் நிதியாண்டில் வரி வருவாயாக ரூ. 14,24,035 கோடியும், வரியற்ற வருவாயாக ரூ.2,08,059, கடனற்ற முதலீட்டு வருவாயாக ரூ.57,626 கோடியும், இவை அனைத்தையும் சேர்த்து ரூ.16,89,720 கோடி வருவாய் பெற்றது. கடனற்ற முதலீட்டு வருவாயில், ரூ.19,729 கோடி கடன்களை மீட்டது மூலமும், ரூ. 37,897 கோடி பங்கு விற்பனை மூலமும் திரட்டப்பட்டது.

 

மாநிலங்களுக்கு வரி பங்காக ரூ.5,94,997 கோடியை மத்திய அரசு வழங்கியதுஇது முந்தைய ஆண்டு வழங்கப்பட்டதைவிட ரூ.55,680 கோடி குறைவு.

 

மத்திய அரசின் மொத்த செலவினம் ரூ.  35,11,181 கோடி. இவற்றில் ரூ.30,86,360 கோடி வருவாய் கணக்கிலிருந்தும்ரூ.4,24,821 முதலீட்டு கணக்கிலிருந்தும் செலவிடப்பட்டது.   மொத்த வருவாய் கணக்கு செலவில், ரூ. 6,82,079 கோடி வட்டியாகவும், ரூ. 6,89,545 கோடி  முக்கிய மானியமாகவும் செலவிடப்பட்டது.  

 

ஏப்ரல் மாதத்துக்கான வரவு செலவு கணக்கு:

 

மத்திய அரசின் ஏப்ரல் மாதம் வருவாய் ரூ.1,47,991 கோடி. இவற்றில் வரி வருவாய் ரூ.1,30,811கோடிவரியற்ற வருவாய் ரூ. 16,808 கோடி.கடனற்ற முதலீட்டு வருவாய் ரூ. 372 கோடி.

 

மாநிலங்களுக்கு வரி பங்காக ரூ.39,175 கோடியை மத்திய அரசு வழங்கியது. இது கடந்தாண்டு இதே காலத்தில் வழங்கியதை விட ரூ.6,864 கோடி குறைவு.

 

மத்திய அரசின் மொத்த செலவு ரூ. 2,26,690 கோடி. இதில் ரூ.1,79,564 கோடி வருவாய் கணக்கிலும், ரூ. 47,126 கோடி முதலீட்டு கணக்கிலும் செலவிடப்பட்டது. மொத்த வருவாய் கணக்கு செலவில் ரூ.29,671 வட்டியாகவும், ரூ.37,369 கோடி முக்கிய மானியமாகவும் செலவிடப்பட்டது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1723145

 

-----


(रिलीज़ आईडी: 1723235) आगंतुक पटल : 212
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , Kannada , English , Urdu , हिन्दी , Punjabi