அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து மருத்துவமனைகளுக்கு காற்று சுத்திகரிப்பு கருவிகளை வழங்குகிறது பஞ்சாப் பல்கலைக்கழகம்
Posted On:
31 MAY 2021 4:06PM by PIB Chennai
அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து மருத்துவமனைகளுக்கு காற்று சுத்திகரிப்பு கருவிகளை வழங்கும் பணியில் பஞ்சாப் பல்கலைக்கழகம் ஈடுபட்டுள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை நிதியுதவியுடன் செயல்படும் அதிநவீன பகுப்பாய்வு கருவி மையம் (SAIF) சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் செயல்படுகிறது.
இந்த மையம், அமெரிக்காவில் உள்ள ‘மாலிக்குள்’ என்ற காற்று சுத்திகரிப்பு கருவி தயாரிக்கும் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து இந்தியாவில் உள்ள 10 மருத்துவமனைகளில் காற்று சுத்திகரிப்பு கருவிகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் மருத்துவமனைகளுக்கு காற்று சுத்திகரிப்பு கருவிகள் கிடைக்கவுள்ளன.
இவற்றின் விவரம்:
1. பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் கொவிட் சிகிச்சை மையம், மற்றும் டாக்டர் ஹர்வன்ஷ் சிங் பல் மருத்துவமனைக்கு 42 கருவிகள் வழங்கப்பட்டன.
2. சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ கல்லூரிக்கு 40 கருவிகள், இமாச்சலப் பிரதேச முதல்வரிடம் வழங்கப்பட்டன.
3. சண்டிகரில் உள்ள பிஜிமருக்கு 60 கருவிகள் மற்றும் ஒரு மாலிக்குள் ஏர் ப்ரோ ஆர்எக்ஸ் கருவியும் வழங்கப்பட்டன.
- சண்டிகரில் உள்ள அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு 30 கருவிகள் வழங்கப்பட்டன.
5. சண்டிகரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிக்கு 20 கருவிகள் வழங்கப்பட்டன.
6. பதிந்தாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 20 காற்று சுத்திகரிப்பு கருவிகள் வழங்கப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1723123
-----
(Release ID: 1723184)
Visitor Counter : 193