ஜல்சக்தி அமைச்சகம்

ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் 2021-22-ஆம் ஆண்டிற்கு குஜராத் மாநிலத்திற்கு ரூ. 3,411 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு

இடுகை இடப்பட்ட நாள்: 31 MAY 2021 3:30PM by PIB Chennai

ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் குழாய் இணைப்பை வழங்கும் இலக்கை அடைவதற்காக மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் தேசிய   இயக்கம் 2021-22-ஆம் ஆண்டிற்கு குஜராத் மாநிலத்திற்கு ரூ. 3410.61 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் முதல் பகுதியாக ரூ. 852.65 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் குடிநீர் திட்டத்திற்காக சுமார் நான்கு மடங்கு அதிகமான நிதி ஒதுக்கீட்டிற்கு மத்திய ஜல் சக்தி அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் அனுமதி அளித்துள்ளார். கடந்த 2019-20-ஆம் ஆண்டில் ரூ. 390.31 கோடியாக இருந்த மத்திய அரசின் ஒதுக்கீடு, 2020- 21-ஆம் ஆண்டில் ரூ. 883.08 கோடியாக அதிகரித்தது.

கடந்த ஆண்டு அமைச்சர் திரு ஷெகாவத்துடன் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், குஜராத் மாநிலத்தில் தேசிய இலக்கான 2024 ஆம் ஆண்டை விட இரண்டு ஆண்டுகள் முன்னதாக அதாவது 2022-ஆம் ஆண்டுக்குள் அனைத்து ஊரக வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் திரு விஜய் ரூபானி உறுதியளித்தார்.

‘அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரும் வளர்ச்சி அடைவோம்’, என்பதை பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படுவதை உறுதி செய்யும் ஜல் ஜீவன் இயக்கம் இந்தக் கொள்கையின் மிகச்சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.

குஜராத்தில் மொத்தம் உள்ள சுமார் 18,000 கிராமங்களில் 6700-க்கும் அதிகமான கிராமங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் ஐந்து மாவட்டங்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1723112

------


(வெளியீட்டு அடையாள எண்: 1723157) வருகையாளர் எண்ணிக்கை : 208
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Telugu