பாதுகாப்பு அமைச்சகம்

எம்வி எக்ஸ்-பிரஸ் பியர்ல் கப்பலில் தீயை கட்டுப்படுத்தும் பணியில் இந்திய கடலோர காவல் படை அயராது முயற்சி

Posted On: 30 MAY 2021 7:25PM by PIB Chennai

இலங்கை அருகே எம்வி எக்ஸ்-பிரஸ் பியர்ல் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் இந்திய கடலோர காவல் படை கப்பல்கள் அயராது பணியாற்றுகின்றன.

இலங்கையின் கொழும்பு அருகே எம்.வி எக்ஸ்-பிரஸ் பியர்ல் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில், இலங்கையுடன் இணைந்து இந்திய கடலோர காவல் படை கடந்த 25ம் தேதி முதல் ஈடுபட்டுள்ளது.

தீயை அணைக்கும் பணி 24 மணி நேரமும் தொடர்ந்து  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிக்குஆபரேஷன் சாகர் ஆரக்‌ஷா 2’ என பெயரிடப்பட்டுள்ளது. இது இந்தியா மற்றும் இலங்கை இடையே கடல்சார் ஒத்துழைப்பு அதிகரித்துள்ளதை காட்டுகிறது.

தற்போது இந்திய கடலோர காவல் படையின் 3 கப்பல்கள், கடல் தண்ணீர் மற்றும் ஏஎப்எப்எப் ரசாயணத்தை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்த ஓயாத தீயணைப்பு முயற்சிகள் மூலம் கப்பலில் தீ தற்போது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. புகையும் குறைந்துள்ளது. தற்போது கப்பலின்  சிறு பகுதியில்  மட்டும் தீ எரிந்து கொண்டிருக்கிறது.

இந்த கடலோர காவல் படையின் வைபவ் மற்றும் வஜ்ரா கப்பல்களுடன் இணைந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டால், அதை அகற்ற சமுத்ர பிரகாரி கப்பலும் தயார் நிலையில் உள்ளதுகூடுதலாக இந்திய கடலோர காவல் படையின் டோர்னியர் ரக விமானம், மதுரையில் இருந்து தினமும் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறது.

தற்போது வரை எண்ணெய் கசிவு எதுவும் ஏற்படவில்லை என கண்காணிப்பு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1722959

------



(Release ID: 1723001) Visitor Counter : 237