எஃகுத்துறை அமைச்சகம்
விசாகப்பட்டினத்தில் ஆர்ஐஎன்எல்-ல் நிறுவனத்தின் மிகப் பெரிய கொவிட் சிகிச்சை மையம்: அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் அர்ப்பணிப்பு
Posted On:
30 MAY 2021 12:16PM by PIB Chennai
விசாகப்பட்டினத்தில் உள்ள ராஷ்ட்ரிய இஸ்பத் நிகாம் நிறுவனத்தின் (ஆர்ஐஎன்எல்) எஃகு ஆலை அமைத்துள்ள 300 ஆக்ஸிஜன் படுக்கைகளுடன் கூடிய மிகப் பெரிய கொவிட் சிகிச்சை மையத்தை பெட்ரோலியத்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
காணொலி காட்சி மூலம் நடந்த இந்த விழாவில், எஃகு துறை இணையமைச்சர் ஃபகன் சிங் குலாஸ்தே, ஆந்திர துணை முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஏ. காளி கிருஷ்ணா சீனிவாஸ், மத்திய அரசு மற்றும் ஆர்ஐஎன்எல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கொவிட் சிகிச்சை மையத்தின் தொடக்கம், கூட்டாட்சி முறைக்கு மிகச் சிறந்த உதாரணம் என குறிப்பட்ட அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், ஜனநாயகத்தில் மக்களின் நலனை கவனிப்பதுதான் அரசின் பொறுப்பு என கூறினார்.
ஆந்திர அரசு மற்றும் உள்ளூர் நிர்வாகத்தின் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவால், ‘‘எங்கு தொற்று உள்ளதோ...அங்கு சிகிச்சை அவசியம்’’ என்ற பிரதமரின் தொலைநோக்கை ஆர்ஐஎன்எல் நிறுவனத்தால், விரைவாக அமல்படுத்த முடிந்தது என அவர் கூறினார். பிரதமரின் அழைப்பை ஏற்று எஃகு நிறுவனங்களுக்கு அருகே ஆக்ஸிஜன் வசதியுடன் நாங்கள் மிகப் பெரிய கொவிட் சிகிச்சை மையங்களை அமைத்து வருகிறோம் என அவர் கூறினார்.
கொவிட் 2ம் அலையில் மத்தியில் நாம் தற்போது இருக்கிறோம். ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர் மற்றும் இதர மருந்துகள் கிடைப்பதன் மூலம் இந்த சவாலை நாம் வென்றுள்ளோம். நமது அடுத்த சவால், நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதுதான். உள்நாட்டு உற்பாத்தியாளர்கள் தடுப்பூசி உற்பத்தியை அதிகரித்துள்ளதாலும், வெளிநாட்டு தயாரிப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடப்பதாலும், ஜூன் மாதம் முதல் தடுப்பூசி விநியோகம் அதிகரிக்கும். ஆர்ஐஎன்எல் நிறுவனமும், மாநில அரசுடன் இணைந்து மக்களுக்கு தடுப்பூசி போடும் பணியில் ஒத்துழைப்புடன் செயல்படுவது மகிழ்சி அளிக்கிறது என அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் கூறினார்.
இந்த 300 படுக்கைகளுடன் கூடிய கொவிட் மையம் தொடக்கம் தான், இரண்டாவது கட்டத்தில் இந்த கொவிட் சிகிச்சை மையத்தின் படுக்கைகள் எண்ணிக்கை 1000-ஆக உயர்த்தப்படும் என அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1722860
----
(Release ID: 1722904)
Visitor Counter : 200