அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

உயர் செயல்திறன் கணினி (HPC) மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள் குறித்து பிரிக்ஸ் செயற்குழு கூட்டத்தில் விவாதம்

Posted On: 30 MAY 2021 9:56AM by PIB Chennai

உயர் செயல்திறன் கணினி (HPC) மற்றும் அதன் வானிலை-காலநிலை-சுற்றுச்சூழல் பயன்பாடுகள் போன்றவற்றில் பிரிக்ஸ் நாடுகளிடையே ஆராய்ச்சி ஒத்துழைப்பின் எதிர்கால திசைகள்; மருந்து வடிவமைப்பு, செயற்கை நுண்ணறிவு மற்றும் ஹெச்பிசி அடிப்படையிலான துல்லியமான மருந்து மற்றும் பொது சுகாதாரத்திற்கு சூப்பர் கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துதல், குறிப்பாக தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவது, நிலையான வளர்ச்சிக்கான புவிசார் தகவல் ஆகியவை பிரிக்ஸ் பணிக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைப் பாதையின் கீழ், உயர் செயல்திறன் கணினி (HPC), தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள் (ICT) தொடர்பான 5-வது பிரிக்ஸ் செயற்குழு கூட்டம் மே 27-28 ஆகிய தேதிகளில் தென்னாப்பிரிக்காவால் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது.

இதில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளான, ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவை பங்கேற்றன. கூட்டத்தில் ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட 50 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

சர்வதேச ஒத்துழைப்பு பிரிவின் ஆலோசகரும் தலைவருமான திரு. சஞ்சீவ் குமார் வர்ஷ்னி, சி-டிஏசியின் மூத்த இயக்குனர் டாக்டர் சஞ்சய் வாந்த்கர் ஆகியோர் பங்கேற்றனர்.

AI, பெரிய தரவு, இயந்திர கற்றல் போன்ற புதிய துறைகள் தோன்றுவதைக் கருத்தில் கொண்டு இந்த பகுதியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர். மருத்துவ அறிவியல், வேளாண்மை, புவி அறிவியல் மாடலிங் மற்றும் உருவகப்படுத்துதல் ஆகிய துறைகளில் சாத்தியமான பயன்பாடுகள், பிரிக்ஸின் பல்வேறு திட்டங்களை ஆதரிப்பதற்கான நிதி உள்ளிட்ட வளங்களின் இணை முதலீட்டிற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை அவர்கள் எடுத்துரைத்தனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1722819

----


(Release ID: 1722902) Visitor Counter : 279