சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
சர்வதேச கொவிட் நிவாரண உதவிகள் குறித்த சமீபத்திய தகவல்கள்
प्रविष्टि तिथि:
29 MAY 2021 2:01PM by PIB Chennai
பல நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் நன்கொடையாக வழங்கும் கொவிட் நிவாரணப் பொருட்களை மத்திய அரசு கடந்த ஏப்ரல் 27-ம் தேதி முதல் பெற்று வருகிறது.
இவைகள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு முறையாக விநியோகிக்கப்படுகின்றன.
கடந்த ஏப்ரல் 27 முதல், மே 28 வரை, மொத்தம் 18,040 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், 19,085 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், 19 ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகள், 15,256 வென்டிலேட்டர்கள், 7.7 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகள், 12 லட்சம் ஃபவிபிராவிர் மாத்திரைகள் ஆகியவை மாநிலங்களுக்கு சாலை மார்க்கமாகவும், வான்வழியாகவும் அனுப்பப்பட்டுள்ளன.
கடந்த 26/28-ம் தேதிகளில் துருக்கி, தாய்வான் (இந்திய வர்த்தக சங்கம்), சுவிட்சர்லாந்து (ரோச்சே) மற்றும் எலி லில்லி ஆகியவற்றிடமிருந்து 20 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், 5 ஆக்ஸிஜன் செறிவூட்டி ஆலைகள், 680 ஆக்ஸிஜன் உருளைகள், 50,000 டோசிலிசுமாப், 20,000 பாரிசிட்டினிப் மற்றும் 50 சுவாசக் கருவிகள் பெறப்பட்டன.
இவற்றை மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் பணி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கண்காணிப்புடன் நடைப்பெறுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1722655
-----
(रिलीज़ आईडी: 1722723)
आगंतुक पटल : 194