அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

அறிவியில் ரீதியிலான முயற்சிகளை மேற்கொள்ளும் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியத்தின் (TDB) நடவடிக்கைகள் கொவிட்-19 ஐ எதிர்கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன

Posted On: 29 MAY 2021 12:47PM by PIB Chennai

COVID 19 எதிர்த்துப் போராடுவதற்கான தொழில்நுட்பங்களை விரைவாகக் கொண்டுவருவதிலும், தொற்றுநோயைச் சமாளிக்க தேசத்திற்கு உதவுவதிலும் அறிவியல் அடிப்படையிலான தொடக்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ஆராய்ச்சியாளர்கள், தொழிலதிபர்கள் மற்றும் தொழில்முனைவோர் தங்கள் திறன்களையும், இந்த பிரமாண்டமான போரை அனைத்து முனைகளிலும் எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளையும் ஒருங்கிணைத்ததால், பல அறிவியல் அடிப்படையிலான தொடக்கங்கள் () முயற்சிகள் புதிய தொழில்நுட்பங்களை வெளிக்கொண்டு, தற்போதுள்ள தொழில்நுட்பங்களை மீண்டும் உருவாக்கி, அதன் செயல்பாடுகளை அளவிட்டு, அரசாங்கத்தின் ஆதரவுடன் சந்தைப்படுத்தப்படுகின்றன.

இந்த காலகட்டத்தில் நாட்டை மேம்படுத்தும் வகையில் பிபிஇ கவச உடைகள், முகக்கவசங்கள், சோதனைக்கான உள்கட்டமைப்பு, தடுப்பூசிகளுக்கான ஆராய்ச்சி ஆகியவற்றின் உற்பத்தி திறனை அதிகரிக்க தற்போதுள்ள திறன், உள்கட்டமைப்பு மற்றும் வளங்கள் நியாயமான முறையில் நிர்வகிக்கப்பட்டன.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி அமைப்பான தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியத்தின் (TDB) நிதி உதவி, பல புதிய () தொடக்க நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை, சோதனைக் கருவிகள், முகக்கவசங்கள், கிருமிநாசினிகள், உடல் வெப்ப பரிசோதனைக் ஸ்கேனர்கள் மற்றும் மருத்துவ சாதனங்கள் போன்றவற்றை சந்தைப்படுத்திக்கொள்ள உதவியது. COVID-19 க்கு எதிரான போராட்டத்தில் இத்தகைய நிதி உதவியை வழங்குவதற்காக தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான தீர்வுகளைத் தேடும் நிறுவனங்களின் திட்டங்களுக்கான அழைப்பால் இது தூண்டப்பட்டது. அழைப்பால் ஊக்கப்படுத்தப்பட்ட, பல புதிய () தொடக்க நிறுவனங்கள் புதுமையான திட்டங்களை முன்வைத்தன, இது சிறிய அறிவியல் அடிப்படையிலான முயற்சிகளால் தொழில்நுட்பங்களை வணிகமயமாக்க உதவியது மற்றும் தொற்றுநோயை எதிர்த்துப் போராட புதுமையான தீர்வுகளைக் கொண்டு வந்தது.

காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் காண்பிக்கும் நபர்களின் மாதிரிகளைத் திரையிட்டு கண்டறிந்து நிகழ்நேர பி.சி.ஆர் (real-time PCR) அடிப்படையிலான மூலக்கூறு கண்டறியும் கருவியை உருவாக்கிய உள்ளூர் நிறுவனம் புனேவைச் சேர்ந்த மைலேப் (Mylab Discovery) டிஸ்கவரி ஆகும். ஐசிஎம்ஆர் மற்றும் சிடிஸ்கோவால் (CDSCO) அங்கீகரிக்கப்பட்டு இந்த கருவி உருவாக்கப்பட்டதோடு, மிகக் குறுகிய காலத்தில் பயன்படுத்தப்பட்டது. TDB இன் ஆதரவுடன், கருவி உற்பத்தி அதிகரிக்கப்பட்டு மிகக்குறுகிய காலத்தில் நாளொன்றுக்கு 30,000 சோதனைகள் 2 லட்சம் சோதனைகள் வரை அதிகரித்தது.

மேலும், இந்த நிறுவனம் அதிக உணர்திறன் கொண்ட ஆன்டிஜென் கருவி (antigen kit) ஒன்றையும் உருவாக்கியுள்ளது. இந்தக் கருவி ஆர்டி-பி.சி.ஆர் சோதனை மற்றும் காம்பாக்ட் எக்ஸ்எல் ஆகியவற்றை அணுக முடியாத தொலைதூர பகுதிகளில் உள்ள 2 கோடிக்கும் அதிகமான இந்தியர்களை அடைந்துள்ளது. இந்நிறுவனம் சிறப்பு ஆய்வகங்களை வடிவமைத்து மகாராஷ்டிரா, கோவா மற்றும் நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்று இரண்டாவது அலைகளின் போது கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் நடமாடும் ஆர்டி-பி.சி.ஆர் ஆய்வகங்களை அமைத்த்து.

இந்தியாவின் முதல் சுய சோதனைக் கருவி மற்றும் அதன் வணிகமயமாக்கலை அதிகரிக்கும்கோவிசெல்ஃப் என்ற வீட்டிலேயே சோதனை செய்து கொள்ளும் கருவியை சமீபத்தில் உருவாக்கிய மைலேப்ஸ், இந்த நெருக்கடியின் போது சிறந்த நிறுவனமாக (யூனிகார்னாக) உருவெடுத்துள்ளது, மேலும் இந்த நிறுவனம் COVID-19 க்கான சோதனை தொடர்பாக மேலும் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1722636

                                                                                        ------



(Release ID: 1722688) Visitor Counter : 177