சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

22.77 கோடிக்கும் அதிகமான கொவிட் தடுப்பூசிகளை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கியுள்ளது மத்திய அரசு


மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் கையிருப்பில் 1.82 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள்.

Posted On: 29 MAY 2021 10:26AM by PIB Chennai

கொவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு இதுவரை, 22.77 கோடிக்கும் அதிகமான (22,77,62,450) கொவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக வழங்கியுள்ளது. இன்று காலை 8 மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில், மொத்தம் 20,80,09,397 டோஸ் தடுப்பூசிகள் (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளன.

சுமார் 1.82 கோடி (1,82,21,403) கொவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் உள்ளன.

அடுத்த 3 தினங்களுக்கு 4.86 லட்சம் (4,86,180) தடுப்பூசி டோஸ்களை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு வழங்கவுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1722604

----


(Release ID: 1722678) Visitor Counter : 161