பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
கொவிட் தொடர்பான சமுதாய சேவை திட்டம் குறித்து உதம்பூர்தொகுதி தலைவர்களுடன் டாக்டர் ஜித்தேந்திர சிங் ஆலோசனை
Posted On:
27 MAY 2021 6:05PM by PIB Chennai
உதம்பூர் - கதுவா-தோடா மக்களவை தொகுதியின் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் கொவிட் தொடர்பான சமுதாய சேவை திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் இன்று ஆய்வு நடத்தினார்.
தொகுதியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சமுதாய சேவை திட்டங்கள் குறித்து அப்போது ஆலோசிக்கப்பட்டது. பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான அரசின் 7ம் ஆண்டு நிறைவு இம்மாதம் 30ம் தேதி வருவதை முன்னிட்டு, மேற்கொள்ளப்படும் சமூக சேவை திட்டங்கள் குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டது.
கொவிட் 2ம் அலையில், மருத்துவமனைகளில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் பேசினார். எந்த நோயாளியும் பாதிக்கப்படாததை உறுதி செய்ய வேண்டும் என உள்ளூர் நிர்வாகத்தினர் கேட்டுக் கொள்ளப்பட்டனர். உதம்பூர் தொகுதியில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆக்ஸிஜன் ஆலைகள் சரியான நேரத்தில் நிறுவப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தடுப்பூசி போடும் பணி 66 சதவீத்துக்கும் அதிமாக மேற்கொள்ளப்பட்டதாக டாக்டர் ஜித்தேந்திர சிங் தெரிவித்தார்.
உதம்பூர் மக்களவை தொகுதிக்கு கொவிட் நிவாரணப் பொருட்கள் அனுப்பியதற்காக மத்திய அமைச்சருக்கு கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நன்றி தெரிவித்தனர்.
கொவிட்-19 தொற்றுக்கு இடையிலும், உதம்பூர் தொகுதியில் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கவில்லை என்றும், இது எந்த சூழ்நிலையிலும் வளர்ச்சி பணிகள் தொடரும் என்ற உறுதியை காட்டுகிறது என்றும் டாக்டர் ஜித்தேந்திர சிங் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1722195
*****************
(Release ID: 1722248)
Visitor Counter : 162