எரிசக்தி அமைச்சகம்

இந்திய எரிசக்தித் தொகுப்புக் கழக ஊழியர்களுக்கு பெங்களூருவில் சிறப்பு கொவிட் தடுப்பூசி முகாம்

இடுகை இடப்பட்ட நாள்: 26 MAY 2021 3:05PM by PIB Chennai

மத்திய எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மகாரத்னா பொதுத்துறை நிறுவனமான இந்திய எரிசக்தித் தொகுப்புக் கழகம், நாடு முழுவதும் பணியாற்றும் தனது ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகிறது.

அந்த வகையில் பெங்களூரு  மண்டல தலைமையகத்தின் இரண்டாவது தென் மண்டல அலுவலகத்தில் மண்டல தலைமையகம், யேலஹங்கா துணை நிலையம், பிடதி துணை நிலையம், சோமன்ஹள்ளி துணை நிலையம், தும்கூர் துணை நிலையம் ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கும், பாதுகாப்பு அதிகாரிகள், ஓட்டுநர்கள், உணவு விடுதியில் பணிபுரிவோர் போன்றவர்களுக்கும், அவர்களைச் சார்ந்த/ சாராத குடும்ப உறுப்பினர்களுக்கும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.

பெங்களூருவில் உள்ள மணிபால் மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த  முகாமில் சுமார் 110 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1721867

----


(வெளியீட்டு அடையாள எண்: 1721905) வருகையாளர் எண்ணிக்கை : 181
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi , Telugu , Kannada