எரிசக்தி அமைச்சகம்
கொவிட் சிகிச்சை நடவடிக்கைகளை தொடர்கின்றன பவர்கிரிட், என்டிபிசி
प्रविष्टि तिथि:
26 MAY 2021 10:30AM by PIB Chennai
மத்திய மின்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பவர்கிரிட், என்டிபிசி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு கொவிட் சிகிச்சை, தடுப்பூசி போடும் பணிகளை தொடர்ந்து மேற்கொள்கின்றன.
மத்திய மின்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பவர்கிரிட் நிறுவனம், தனது ஊழியர்கள், ஓய்வு பெற்ற ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு கொவிட் தடுப்பூசி போடுவது மற்றும் சிகிச்சை அளிப்பதில் தொடர்ந்து உதவி வருகிறது.
வடக்கு பகுதியில் உள்ள பவர் கிரிட் நிறுவனம் தனது ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினருக்காக ஜலந்தர், மோகா, ஹமிர்பூர் மற்றும் வகோரா பகுதிகள் உட்பட பல துணை மின் நிலையங்களில் 5 தடுப்பூசி முகாம்களை நடத்தியது. ஜம்முவில் 100 ஒப்பந்த தொழிலாளர்களுக்காக ஒரு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இங்கு 24 மணி நேர தனிமை சிகிச்சை மையமும் அமைக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் மற்றும்
அவர்களது குடும்பத்தினர் அறிந்து கொள்ளும் வகையில் கொவிட் தடுப்பு முறைகள் குறித்து ஜம்முவில் உள்ள தலைமையகத்தின் வளாகம், ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் விழிப்புணர்வு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
என்டிபிசி நிறுவனத்தின் கொவிட் சிகிச்சை மையம்:
மின்துறை அமைச்சகத்தின் மற்றொரு பொதுத்துறை நிறுவனமான தேசிய அனல் மின் நிறுவனம்( என்டிபிசி), அப்போலோ தொலைதூர சுகாதார சேவை அமைப்புடன் இணைந்து அசாமில் உள்ள பொங்கைகான் பகுதியில் கொவிட் சிகிச்சை மையத்தை நேற்று தொடங்கியது. இதை என்டிபிசி நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் திரு சுப்ரதா மண்டல் தொடங்கி வைத்து, அங்குள்ள வசதிகளை ஆய்வு செய்தார். இங்கு 10 கொவிட் சிகிச்சை படுக்கைகள், வென்டிலேட்டருடன் ஒரு ஐசியு படுக்கை வசதிகள் உள்ளது. மேலும் இந்த மையம் வெப் கேமிரா, எல்இடி டி.வி ஆகியவற்றுடன் அப்போலோவுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் உடல்நிலை மோசமடையும் நோயாளிகளை தொலை தூரத்தில் இருந்தே கண்காணித்து சிகிச்சைகளுக்கான ஆலோசனையை வழங்க முடியும். அதோடு, ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் உட்பட பல வசதிகள் இந்த மையத்தில் உள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1721806
------
(रिलीज़ आईडी: 1721885)
आगंतुक पटल : 267