எரிசக்தி அமைச்சகம்
நாகாலாந்து ஆக்ஸிஜன் ஆலைக்கு தடையற்ற மின்சாரம் வழங்க டிரான்ஸ்பார்மர் அமைத்தது பவர்கிரிட் நிறுவனம்
Posted On:
24 MAY 2021 1:57PM by PIB Chennai
கொரோனா தொற்று சமயத்தில் நம்பகமான மின்விநியோகத்தை உறுதி செய்ய, மத்திய மின்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனம், 24 மணி நேரமும் பணியாற்றி வருகிறது.
மின்தடை ஏற்படும் சம்பவங்களை குறைக்கவும், நாகாலாந்தின் ஒரே ஆக்ஸிஜன் ஆலைக்கு தடையற்ற மின்விநியோகத்தை உறுதி செய்யவும், திமாபூரில் உள்ள மருத்துவமனையின் துணை மின்நிலையத்தில் 10 மெகாவோல்ட் ஆம்பியர் டிரான்ஸ்பார்மர் அமைத்து தரும்படி பவர்கிரிட் நிறுவனத்திடம் நாகாலாந்து அரசு கேட்டுக் கொண்டது.
இதையடுத்து, அங்கு 2 நாட்களுக்குள் டிரான்ஸ்பார்மரை வெற்றிகரமாக அமைத்து கொடுக்கும் பணியை கடந்த 22ம் தேதி பவர்கிரட் நிறுவனம் முடித்தது. இதன் மூலம் நாகாலாந்தின் ஆக்ஸிஜன் ஆலை, மற்றும் அருகில் உள்ள பகுதிகளுக்கு தடையற்ற மின்விநியோகம் ஏற்ட வழிவகுக்கும்.
நாகாலாந்தில் உள்ள பிஎம்ஏ ஆக்ஸிஜன் ஆலைக்கு முன்பு 5 மெகாவோல்ட் ஆம்பியர் டிரான்ஸ்பார்மர் மூலம் மின் விநியோகம் செய்யப்பட்டது. தற்போது புதிய டிரான்ஸ்பார்மர் மூலம் திமாப்பூர் மருத்துவமனையின் துணை மின் நிலையத்திலிருந்து 11 கே.வி ரோங்மீ சாதனம் மூலம் தடையற்ற மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1721232
*****************
(Release ID: 1721251)
Visitor Counter : 200