சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிடம் 1.80 கோடி கொவிட் தடுப்பூசிகள் கையிருப்பு
Posted On:
24 MAY 2021 11:59AM by PIB Chennai
கொவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் இந்திய அரசின் ஐந்து அம்ச உத்திகளில் பரிசோதனை, தடம் அறிதல், சிகிச்சை, சரியான வழிகாட்டு நெறிமுறை ஆகியவற்றுடன் தடுப்பூசி, மிக முக்கியமான அங்கம் வகிக்கிறது. அந்த வகையில், இதுவரை, சுமார் 21.80 கோடி (21,80,51,890) கொவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், மத்திய அரசு இலவசமாக வழங்கியுள்ளது. இன்று காலை 8 மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில், மொத்தம் 20,00,08,875 டோஸ் தடுப்பூசி (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளது.
சுமார் 1.80 கோடி (1,80,43,015) கொவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் உள்ளன.
அடுத்த மூன்று நாட்களில், மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் ஏறத்தாழ 48 லட்சம் (48,00,650) தடுப்பூசி டோஸ்களை மத்திய அரசு கூடுதலாக வழங்கவிருக்கிறது.
ஒவ்வொரு மாதமும் மத்திய மருந்துகள் ஆய்வகம் அனுமதி அளித்த மொத்த தடுப்பூசிகளில் 50 சதவீதத்தை இந்திய அரசு கொள்முதல் செய்து, மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்குவது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1721207
••••••••••••••••••••
(Release ID: 1721238)
Visitor Counter : 270
Read this release in:
Malayalam
,
Bengali
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada