ரெயில்வே அமைச்சகம்
கொவிட் சவால்களுக்கு இடையிலும் ரயில்வேயின் நிலக்கரி போக்குவரத்து கடந்த வருடத்தை விட 54% அதிகரிப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
21 MAY 2021 5:57PM by PIB Chennai
கொவிட் சவால்களுக்கு இடையிலும், சாதனை அளவிலான சரக்குப் போக்குவரத்தில் 2021-22 நிதி ஆண்டில் ரயில்வே தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
2020 மற்றும் 2019 ஆண்டுகளின் சரக்கு ஏற்றுதல் அளவான 116.1 மெட்ரிக் டன் மற்றும் 167.66 மெட்ரிக் டன்னை விட முறையே 59.38 சதவீதம் மற்றும் 10.37 சதவீதம் அதிகமாக 185.04 மெட்ரிக் டன் சரக்குகளை 2021-22 நிதி ஆண்டில் இந்திய ரயில்வே கையாண்டுள்ளது.
இந்த காலகட்டத்தில் ரூபாய் 18542.8 கோடியை சரக்கு போக்குவரத்து மூலம் ரயில்வே ஈட்டியுள்ளது. 2019-ம் ஆண்டு சரக்கு கையாளுதல் மூலம் ஈட்டிய வருவாய் ஆன ரூபாய் 17674 கோடி மற்றும் 2020-ம் ஆண்டு சரக்கு கையாளுதல் மூலம் ஈட்டிய வருவாய் ஆன ரூபாய் 10540.1 கோடியுடன் ஒப்பிடும்போது இது முறையே 4.92 சதவீதம் மற்றும் 75.93 சதவீதம் அதிகமாகும்.
தொடர் வளர்ச்சியை நிலக்கரித்துறை கண்டு வந்துள்ளது. 2021-22 நிதியாண்டில், 88.15 மெட்ரிக் டன் நிலக்கரியை இந்திய ரயில்வே கையாண்டது. 2020-ம் ஆண்டு கையாண்ட 57.23 மெட்ரிக் டன் மற்றும் 2019-ம் ஆண்டு கையாண்ட 86.94 மெட்ரிக் டன்னுடன் ஒப்பிடும்போது இது முறையே 54.03 சதவீதம் மற்றும் 1.39 சதவீதம் அதிகமாகும்.
2021 மே மாதத்தில், சரக்கு கையாளுதல் மூலம் ரூபாய் 7368.00 கோடியை இந்திய ரயில்வே ஈட்டியது. கடந்த வருடத்தின் இதே மாதத்தில் ஈட்டிய ரூபாய் 4541.21 கோடி உடன் ஒப்பிடும் போது இது 62.20 சதவீதம் அதிகமாகும். 2019-ம் வருடம் இதே காலகட்டத்தில் ஈட்டிய ரூபாய் 7021.75 கோடி உடன் ஒப்பிடும் போது இது 4.93 சதவீதம் அதிகமாகும்.
செயல்திறன் மற்றும் செயல்பாடுகளை அனைத்து விதத்திலும் மேம்படுத்திக் கொள்ளும் வாய்ப்பாக கொவிட்டை இந்திய ரயில்வே பயன்படுத்தி வருகிறது.
*****************
(வெளியீட்டு அடையாள எண்: 1720713)
வருகையாளர் எண்ணிக்கை : 231