உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து தடையற்ற மருத்துவ பொருட்கள் விநியோகம் தொடர்கிறது

Posted On: 20 MAY 2021 4:07PM by PIB Chennai

கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில், மருத்துவ அத்தியாவசியப் பொருட்களை தடையின்றி விநியோகிப்பதில் திருவனந்தபுரம் விமான நிலையமும், அதன் முன்களப் பணியாளர்களும் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.

திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து மே 19ம் தேதி வரை, மொத்தம் 313 பெட்டிகள் (9.76 மெட்ரிக் டன்) கொவிட்-19 தடுப்பூசிகள் பல விமானங்கள் மூலம் அனுப்பப்பட்டுள்ளன. ஆக்ஸிஜன் நெருக்கடியை சமாளிக்க, மே 19ம் தேதி வரை  மொத்தம் 300 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், 180 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், திருவனந்தபுரம் வழியாக விமானப்படையின் சி-17, ஏஎன்-32 ரக விமானங்களில் கொண்டு செல்லப்பட்டன. 

இதுதவிர, பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய, மத்திய அரசின் அறிவுறுத்தல் படி  கொவிட்-19 தொடர்பான வழிகாட்டுதல்களை திருவனந்தபுரம் விமான நிலையம் பின்பற்றி வருகிறது.  கொவிட் தொற்று  தடுப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, விமான நிலையத்தின் முனையங்களில் எலக்ட்ரானிக் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

ஊழியர்களுக்கு கொவிட் தடுப்பூசி முகாமையும் நடத்தி, பாதுகாப்பு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் திருவனந்தபுரம் விமான நிலையம் பின்பற்றி வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1720274

*****************(Release ID: 1720322) Visitor Counter : 146