உள்துறை அமைச்சகம்

வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் பதிவு சான்றிதழின் காலக்கெடு நீட்டிப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 19 MAY 2021 6:32PM by PIB Chennai

வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் ஏற்கனவே காலாவதியான அல்லது 29.09.2020 முதல் 30.09.2021 வரையிலான காலகட்டத்தில் காலாவதி ஆகும் பதிவு சான்றிதழின் காலக்கெடுவை மத்திய உள்துறை அமைச்சகம் நீட்டித்துள்ளது. இதன்படி 30.09.2021 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய கொவிட்-19 நெருக்கடி நிலையைக் கருத்தில் கொண்டு வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின்கீழ் அரசு சாரா நிறுவனங்கள், திருத்தி அமைக்கப்பட்ட சட்டத்திற்கு எளிதாக மாறுவதற்கு ஏதுவாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக http://www.fcraonline.nic.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பொது அறிவிப்பில் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1719992

------


(வெளியீட்டு அடையாள எண்: 1720053) வருகையாளர் எண்ணிக்கை : 357
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , English , Marathi , हिन्दी , Manipuri , Punjabi , Kannada