பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
ஜம்மு காஷ்மீரில் தடுப்பூசி நடவடிக்கையை மக்கள் பிரதிநிதிகள் தீவிரப்படுத்த வேண்டும்: டாக்டர் ஜித்தேந்திர சிங் வேண்டுகோள்
Posted On:
19 MAY 2021 4:53PM by PIB Chennai
ஜம்மு காஷ்மீரில் தடுப்பூசி நடவடிக்கையை, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் நட்பு முறையில் தீவிரப்படுத்த வேண்டும் என வடகிழக்கு பகுதி மேம்பாட்டு இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் கொவிட் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்துவது குறித்து மேயர்கள், துணை மேயர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகளுடன் மத்திய அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் கலந்துரையாடினார். அப்போது ஜம்மு மற்றும காஷ்மீர் நகராட்சிகள், தடுப்பூசி திட்டத்தில் மக்களை அதிகம் பங்குபெறவைத்து, இத்திட்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும் என அவர் கூறினார்.
கொவிட்-19 தடுப்பூசி விநியோகத்தை அதிகரிக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக, மாவட்ட ஆட்சியர்களிடம் நேற்று கலந்துரையாடியபோது, பிரதமர் தெரிவித்தாக டாக்ட் ஜித்தேந்திர சிங் கூறினார்.
தடுப்பூசி திட்டத்தை மக்கள் இயக்கமாக கொண்டு செல்ல தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் முன்வர வேண்டும் எனவும் இதற்காக நகராட்சிகளுடன் இணைந்து சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும் எனவும் டாக்டர் ஜித்தேந்திர சிங் அழைப்பு விடுத்தார். மக்கள் இடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் நடவடிக்கையில், மக்கள் பிரதிநிதிகள் ஈடுபட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
அத்தியாவசிய மருந்துகள் மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவற்றை தேவையின்றி பதுக்கக்கூடாது என சமுதாய தலைவர்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் டாக்டர் ஜித்தேந்திர சிங் கேட்டுக் கொண்டார்.
கொவிட்-19ஐ முறியடிக்க தொலை தூர பகுதிகளில் கொவிட் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும், தடுப்பூசி போட வேண்டும் என விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் மக்கள் பிரதிநிதிகளை கேட்டுக் கொண்டார்.
ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் பகுதிக்கு கொவிட் நிவாரணபா பொருட்களையும் டாக்டர் ஜித்தேந்திர சிங் நேற்று அனுப்பி வைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1719936
-------
(Release ID: 1720035)
Visitor Counter : 189