சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட் நிவாரணப் பொருட்களின் அண்மைத் தகவல்கள்
प्रविष्टि तिथि:
19 MAY 2021 5:00PM by PIB Chennai
கொவிட் தொற்றின் பாதிப்பு பெரும் மடங்கு நாட்டில் உயர்ந்திருப்பதால் கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி முதல் பல்வேறு நாடுகளும், அமைப்புகளும் நிவாரண மருத்துவ உபகரணங்கள் மற்றும் கருவிகளை வழங்கி வருகின்றன.
2021 ஏப்ரல் 27 முதல் மே 18 வரை பல்வேறு நாடுகள் மற்றும் அமைப்புகள் இணைந்து 12,874 பிராணவாயு செறிவூட்டிகள், 15,801 பிராணவாயு சிலிண்டர்கள், 19 பிராணவாயு உற்பத்திக் கருவிகள், 9,925 செயற்கை சுவாசக் கருவிகள், சுமார் 6.1 லட்சம் ரெமிடெசிவிர் குப்பிகள் ஆகியவை அனுப்பப்பட்டுள்ளன.
2021 மே 17/18 அன்று ஸ்பெயின், ஒன்டாரியோ, நியூசிலாந்து, தென்கொரியா, ஜெர்மனி ஆகிய நாடுகளிலிருந்து பெறப்பட்ட முக்கிய பொருட்கள்:
• பிராணவாயு செறிவூட்டிகள்: 191
• செயற்கை சுவாசக் கருவிகள்: 1,399
• இன்ஃப்ரா ரெட் வெப்பமானி: 500
பல்வேறு நாடுகள் மற்றும் அமைப்புகளிடமிருந்து வழங்கப்படும் பொருட்கள் மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் துரிதகதியில் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதற்காக பிரத்தியேக ஒருங்கிணைப்பு மையம் ஒன்றை மத்திய சுகாதார அமைச்சகம் உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1719938
-----
(रिलीज़ आईडी: 1720029)
आगंतुक पटल : 245