சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

நுரையீரல் ஆரோக்கியத்துக்கு மூச்சுப் பயிற்சி செய்யுங்கள்: நிபுணர் அறிவுரை

Posted On: 19 MAY 2021 12:52PM by PIB Chennai

கொவிட் 2ம் அலையில் ஆக்ஸிஜன் தேவை மிகவும் அதிகரித்துள்ளது. தற்போது மூச்சுத்திணறல் முக்கிய அறிகுறியாக உள்ளதால், ஆக்ஸிஜன் தேவை அதிகமாக உள்ளதாக நிதி ஆயோக் உறுப்பினர்(சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இதய அறுவை சிகிச்சை மையம் மற்றும் நுரையீரல் பராமரிப்பு அமைப்பின் தலைவர் டாக்டர் அரவிந்த் குமார் கூறுகையில், ‘‘ கொவிட் நோயாளிகளில் 90 சதவீதம் பேர் நுரையீரல் பிரச்சனையை அனுபவிக்கின்றனர். ஆனால் இது மருத்துவ ரீதியாக முக்கியமான பிரச்னை அல்ல.   10 முதல் 12 சதவீதம் பேருக்கு மட்டுமே நிமோனியா எனும் நுரையீரல் பாதிப்பு ஏற்படுகிறது. அப்போது நுரையீரலில் உள்ள சிறு காற்று பைகள் வீக்கமடைகின்றன. கொவிட் நோயாளிகளில், சிலருக்கே  மூச்சுத் திணறல் கடுமையான நிலைக்கு செல்லும் போது ஆக்ஸிஜன் உதவி தேவைப்படும்.

மூச்சுப் பயிற்சியை மேற்கொண்டால், நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தேவை குறையும் மற்றும் தங்கள் நிலையை கண்காணிக்கவும் உதவும்

மூச்சுப் பயிற்சி எவ்வாறு உதவுகிறது?

மிதமான அறிகுறியுள்ள கொவிட் நோயாளிகளுக்கு, மூச்சுப் பயிற்சி சிறந்த பலன் அளிக்கும். நோயாளிகள் மூச்சுப் பயிற்சி செய்தால், அவர்களுக்கு ஆக்ஸிஜன் தேவைப்படுவது குறைகிறது. நோயாளிகளின் நிலையை அறிய, இந்த பயிற்சியை ஒரு பரிசோதனையாகவும் மேற்கொள்ள முடியும். மூச்சை இழுத்து பிடித்து வைத்திருக்கும் நேரம் குறைந்தால், அது ஆரம்ப எச்சரிக்கை அறிகுறி. அந்த நோயாளி மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும். நோயாளியால், மூச்சை இழுத்து பிடித்திருக்கும் நேரத்தை படிப்படியாக அதிரிக்க முடிந்தால், அது நேர்மறையான அறிகுறி.

மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகள், வீடு திரும்பிய நோயாளிகள் ஆகியோரும் மருத்துவரிடம் ஆலோசித்து இந்த மூச்சுப் பயிற்சியை மேற்கொள்ளலாம். இது ஆக்ஸிஜன் தேவையை குறைக்கும்

ஆரோக்கியமாக இருப்பவர்களும் இந்த மூச்சுப் பயிற்சியை மேற்கொள்ளலாம். இது நுரையீரல்களை ஆரோக்கியமாக வைக்க உதவும்.

பாதிப்பை முன்கூட்டியே கண்டுபிடிப்பது முக்கியம்:

கொவிட் முதல் அலையின் போது, காய்ச்சல் மற்றும் இருமல் பொதுவான அறிகுறிகளாக இருந்தன. இரண்டாவது அலையின் போது தொண்டை வலி, மூக்கில் நீர் வடிதல், கண் சிவப்பமாக மாறுதல், தலைவலி, உடல்வலி, தடிப்பு, குமட்டல், வாந்தி மற்றும் வயிற்று போக்கு போன்ற பல அறிகுறிகள் ஏற்படுகின்றன. 3 மற்றும் நான்கு நாட்களுக்கு பிறகே நோயாளிக்கு காய்ச்சல் ஏற்படுகிறது.   அதன்பின் நோயாளி பரிசோதனைக்கு செல்கிறார். முடிவுகள் தெரியவும் நேரம் ஆகிறது. கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்படும்போது, பாதிப்பு ஏற்பட்டு 5 முதல் 6 நாட்கள் ஆகிறது. அதற்குள் நுரையீரல் ஏற்கனவே பாதித்து விடுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1719850

------
 


(Release ID: 1720011) Visitor Counter : 6187