கலாசாரத்துறை அமைச்சகம்

சர்வதேச அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு, ஒலி-ஒளி வழிகாட்டி செயலியை அறிமுகம் செய்தது நவீன கலைக்கான தேசிய தொகுப்பு மையம்

Posted On: 18 MAY 2021 3:45PM by PIB Chennai

சர்வதேச அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு, புதுதில்லியில் உள்ள நவீன கலைக்கான தேசிய தொகுப்பு மையம்(என்ஜிஎம்ஏ) ஒலி-ஒளி வழிகாட்டி செயலியை அறிமுகம் செய்தது. இதன் மூலம் அருங்காட்சியக பார்வையாளர்கள், தேசிய தொகுப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ள பொக்கிஷமான இந்திய நவீன கலை பற்றிய நிகழ்வுகளையும், கதைகளையும் ஸ்மார்ட் போன் மூலம் எங்கிருந்தும், எப்போதும் கேட்க முடியும். அருங்காட்சியகத்தின் தொகுப்புகளில் வைக்கப்பட்டுள்ள நவீன கலை பொக்கிஷங்களை ஆய்வு செய்வதற்கு இந்த செயலி ஒலி-ஒளி வழிகாட்டியாக உள்ளது. 

இந்த செயலி, கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலும் கிடைக்கிறது. அருங்காட்சியகத்தின் நவீன கலை பற்றிய கதைகளை கேட்க, இந்த செயலியை பதிவிறக்கம் செய்து, அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்கள் மூலம் உள்ளே செல்ல வேண்டும்.  ஒவ்வொரு பாகம் முடிந்ததும், அடுத்த எண்கள் வெளிப்படும். இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய விரும்பாதவர்கள், இந்த செயலின் இணையள பதிப்பு மூலமாகவும், க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து பார்க்கலாம். இந்த என்ஜிஎம்ஏ செயலியை இலவசமாகப் பயன்படுத்தலாம். 

சர்வதேச அருங்காட்சியக தினம் 2021-ஐ முன்னிட்டு இந்த செயலியை, அருங்காட்சியகம் இன்று அறிமுகம் செய்தது.

மேலும் தகவல்களுக்கு, தயவு செய்து கீழ்கண்டவற்றைப் பார்க்கவும்:

எஜிஎம்ஏ இணையதளம்: http://ngmaindia.gov.in/

சோ-கம் :https://so-ham.in

எஜிஎம்ஏ, முகநூல்: :https://www.facebook.com/ngmadelhi

எஜிஎம்ஏ டிவிட்டர்: https://twitter.com/ngma_delhi

எஜிஎம்ஏ இன்ஸ்டாகிராம் :@ngma.delhi

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1719598

------



(Release ID: 1719701) Visitor Counter : 185